அரசியல்

வீடு திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ 1.50 லட்சம் வட்டி சலுகை

புதுடெல்லி

மத்திய பட்ஜெட்டுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. தொடர்ந்து பட்ஜெட் உரை தொடங்கியது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார்.

அதன் முக்கிய விவரங்கள் வருமாறு:-

 • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ 1.50 லட்சம் வட்டி சலுகை 2020 வரை அனுமதிக்கப்படும்.

 • சர்வதேச நிதிச் சேவை நிறுவனங்களுக்கு 100 சதவீத வரிச் சலுகை, 120 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

 • இணையதளம் மூலம் முக அடையாளம் இல்லாமல் வரித்தாக்கல் செய்யலாம்.

 • வங்கி கணக்கில் இருந்து 1 கோடிக்கு மேல் பணமாக எடுத்தால் 2% டிடிஎஸ் பிடிக்கப்படும், குறைந்த அளவிலான ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு எந்த கட்டணமும் கிடையாது.

 • மின்சார வாகன உற்பத்தி தொழில் தொடங்கும் நிறுவனங்கள், ஒப்பந்தங்கள், முதலீடுகளுக்கு வரிச்சலுகை, கடந்த 5 ஆண்டுகளில் நேரடி வரி வருமானம் 78% உயர்வு

 • இதுவரை 10 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி, இனி 12.5 சதவீதமாக அதிகரிப்பு.

 • பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிப்பு. ரோடு, கட்டமைப்பு செஸ் என்ற பெயரில் 1 லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு தலா 1 ரூபாய் அதிகரிப்பு.

 • இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் கலால் வரி அதிகரிக்கப்படும். ராணுவ தளவாட பொருட்களுக்கு கலால் வரி கிடையாது.

 • உலக அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது. எனவே ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் மீது 1 ரூபாய் சுங்க வரி அதிகரிப்பு.

 • டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது.

 • டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைப்பதற்காக, ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேலாக ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், TDS வரி 2 சதவீதம் விதிக்கப்படும்.

 • வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை, ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம்.

Comment here