ஆன்மிகம்

வீட்டில் சுபகாரியங்கள் தொடர்ந்தால்

சில பேர் வீட்டில் பணவரவு நன்றாக வரும். ஆடை, அணிகலன்கள், ஆடம்பரப் பொருட்கள் எல்லாவற்றையும் அந்த பணத்தை வைத்து வாங்குவார்கள். ஆனால் அந்தப் பொருள் வாங்கிய திருப்தியை அடைய முடியாது. இவர்களுக்கு பணத்திற்காக எந்த குறையும் இருக்காது. ஆனால் வீட்டில் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். அதாவது எல்லாம் இருந்து கூட அவர்களது மனதில் மகிழ்ச்சி இருக்காது. காரணம் அவர்களது வீட்டில் இருக்கும் வாரிசுக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ திருமணமாகாமல் அல்லது குழந்தை பிறக்காமல் இப்படி எதோ ஒரு தீராத குறையும், மன அழுத்தமும் அவர்களுக்கு இருக்கும். மொத்தத்தில் பணம் இருக்கிறது. சந்தோஷமும், மன நிம்மதியும் இல்லை. இப்படி இருந்தால் அந்த வீட்டில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்பது தானே அர்த்தம். ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு துர்சக்தி சுப நிகழ்ச்சிகளை நடத்த விடாமல் தடுக்கும். இப்படிப்பட்ட பிரச்சனையை எப்படி தீர்ப்பது? ஒரு சுலபமான வழி உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாமா? கல் உப்புபை முகத்தின் நேராக சுற்றி தண்ணீரில் கரைத்தால் நம் திருஷ்டியானது எப்படி கரையும் என்று நம்புகிறோமோ? அதே போல் தான் இந்த பரிகாரத்தையும் முழுமையாக நம்பலாம். காலை எழுந்தவுடன் சுத்தமாக குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து, உங்கள் குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு, ஒரு கண்ணாடி டம்ளரில் சுத்தமான நீரை நிரப்பி விட்டு அதில் ஒரு ஸ்பூன் கல் உப்பை நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும். உப்புத் தண்ணீர் உள்ள அந்த கண்ணாடி டம்ளரை இறைவனின் முன்பு வைத்து, உங்களுக்கு இருக்கும் குறைகளை போக்க வேண்டும் என்று குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் நன்றாக வேண்டிக்கொள்ளுங்கள். பின்பு நீருடன் இருக்கும் அந்த டம்ளரை எடுத்து தென் மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். தரையில் வைக்க வேண்டாம். இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களின் மீதும் வைக்க வேண்டாம். ஒரு மரப்பலகையின் மீதோ அல்லது ஒரு காகித அட்டையின் மீதோ வைத்துவிடுங்கள். ஒரு நாள் முழுவதும் அது அந்த இடத்திலேயே இருக்கட்டும். – Advertisement – மறுபடியும் மறுநாள் எழுந்து குளித்து முடித்துவிட்டு நீங்கள் தென்மேற்கு மூலையில் வைத்த அந்தப் பழைய தண்ணீரை எடுத்து வீட்டின் வெளியே கொட்டி விடுங்கள். உங்களின் வீட்டில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத துர்சக்திகள் எதுவாக இருந்தாலும் அந்த தண்ணீரின் மூலமாக வெளியே சென்றுவிடும். உங்கள் கஷ்டங்கள் இதன் மூலம் படிப்படியாக குறையும் என்பதை நீங்களே உணர்வீர்கள். பழைய தண்ணீரை வெளியே கொட்டிவிட்டு, டம்ளரை கழுவி புதிய தண்ணீர் நிரப்பி புதியதாக உப்பு போட்டு அதேபோல் இறைவனிடம் வைத்து வேண்டிக் கொண்டு திரும்பவும் தென்மேற்கு மூலையில் வைத்து விடுங்கள். தினசரி இந்த வழிபாட்டை மனப்பூர்வமாக செய்து வந்தால் உங்களுக்கு இருக்கும் மன கஷ்டமானது விரைவில் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை அடைவீர்கள். இதுநாள் வரை உங்களது வீட்டில் நடைபெறாமல் இருந்த சுபநிகழ்ச்சிகள் கூட, இந்த பரிகாரத்தை செய்து வருவதன் மூலம் சில தினங்களில் கைகூடி வரும். சிலருக்கு பணமே கஷ்டம். ஆனால் சிலருக்கு மனமே கஷ்டம்.

Comment here