Sliderசம்பவம்

வெட்க கேட… மானக் கேடு…

Rate this post

 

சேலம் எட்டுவழிச் சாலையில் பொதுமக்கள் இன்று அவர்களுடைய இடத்தில் மரக் கன்றுகளை நட வந்தவர்களை காவல்துறை தடுத்து நிறுத்தியது.

காரணம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் நிலையில் இதற்கு தடை செய்யப்படுவதாக காவல்துறை விளக்கம் அளிக்கும் நிலை.

அதுமட்டுமின்றி மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மரம் நடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும் என்று காவல்துறை சொல்வது கேலியின் உச்சம்.

தமிழக அரசு எட்டு வழிச்சாலையின் ஓரங்களில் இருக்கும் மரங்களை வெட்டியதற்கு நீதிமன்றம் வெட்டப்பட்ட மரங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு மரங்களை நட வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், இன்றுவரை ஒரே ஒரு செடி கூட தமிழக அரசு நடவில்லை.

இந்த நிலையில் செடி நட வந்த பொதுமக்களை, அரசு மொழியில் சொன்னால் சமூக விரோதிகளை, காவல்துறை தடுத்து நிறுத்திய சம்பவம் மிகவும் வெட்க கேடான ஒன்றாகும்.

மரங்களை வெட்டுவதற்கே அனுமதி வாங்காத நம்ம தமிழ்நாட்டில், செடி நடுவதற்கு அனுமதி வாங்க வேண்டும் என்பது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.

இன்று இந்த சம்பவங்கள் நடந்த மாவட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சொந்த மாவட்டம்.

அவர் ஒரு விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை நான் நினைவு படுத்த விரும்புகிறேன்.

கஞ்சா செடி வெச்சி வளக்கின்றவனைக்கூட இப்படி அவமானப் படுத்தி இருக்க மாட்டாங்க நம்முடைய காவல்துறை.

அதே மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்பு ராஜலட்சுமி என்ற 13 வயது பெண் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்திற்கு, தன்னுடைய மாவட்டத்தில் நடந்த இந்த கொடூரமான சம்பவத்திற்கு இன்றுவரை ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத முதல்வர் நமக்கு கிடைத்த வரம்.

குறைந்தபட்சம் குற்ற உணர்வு கூட இல்லாத இந்த அரசு, ஒரு உதவாத திரைப்படத்திற்காக அமைச்சவையை கூட்டி நடவடிக்கைகள் எடுக்கின்றது.

எதிர் கட்சின்னு ஒன்னு இருக்கான்னே தெரியாது. நம்ம மக்கள் ஓட்டே போடாம தோர்கடித்த திருமாவளவன், சீமான், போன்றவர்கள், மட்டுமே இதையெல்லாம் கேட்பாங்க.

ஒழுங்கா ஓட்டே போட தெரியாத நம்மால, ஆளவே தெரியாதவன் ஆளுங்கட்சியாகவும், எதிர்க்கவே தெரியாதவன் எதிர்கட்சியாகவும் விளங்கும் அவல நிலை இருந்து வருகிறது.

நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்க திறன் இல்லாத அரசு, செடிகளை நட பொதுமக்களையாவது அனுமதிக்க நாம் அனைவரும் வலியுறுத்த வேண்டுகிறேன்.

தோழமையுடன்
டி.எஸ்.ஆர்.சுபாஷ்

Comment here