உலகம்

வெர்ஜினாவை புரட்டி போட்ட மழை ; 100 ஆண்டு வரலாற்றில் இல்லாதது

வெர்ஜினா:
100 ஆண்டு வரலாற்றில் இல்லாத அளவிற்கு அமெரிக்காவின் வெர்ஜினாவில் பலத்த மழை பெய்துள்ளது. 20 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவில் உள்ள மேற்கு வெர்ஜினியாவில் கடந்த 2 நாட்களாக கன மழை கொட்டி தீர்த்தது. மழை அளவு 25 செ.மீட்டர் பதிவாகியிருக்கிறது. இதன் காரணமாக இங்குள்ள முக்கிய நதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் நீர் தேக்கங்கள் நிரம்பி வழிகிறது. இதனால் தண்ணீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதை காண முடிகிறது. பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நூற்றுக்கணக்கான கார்கள் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டன.

இது குறித்து கவர்னர் இயரல் ராய் கூறுகையில்; மழை காரணமாக பெரும் நாசத்தை வெர்ஜினா சந்தித்துள்ளது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் எமர்ஜென்ஸி நிலை அறிவித்துள்ளோம் என்றார். 100 ஆண்டு வரலாற்றில் இது போன்ற பெரும் மழை பெய்தது இல்லை. 14 பேர் பலியானதாகவும், பலி எண்ணிக்கை 20 ஐ தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

Comment here