விளையாட்டு

வெற்றியுடன் தொடங்கிய சாய்னா:இந்தோனேஷியா பாட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்றார்

Rate this post

ஜகார்த்தாவில் நடந்த இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.

சாய்னாவுக்கு எதிராக ஆடிய ஸ்பெயின் வீராங்கனை கரோலின் மரின் திடீரென காயத்தில் அவதிப்பட்டு போட்டியில் இருந்து பாதியிலேயே விலகியதால், சாம்பின் பட்டத்தை சாய்னா வென்றார்.  2019-ம் ஆண்டை சாய்னா நேவால் வெற்றியுடன் தொடங்கி கோப்பையை  கைப்பற்றியுள்ளார். இந்தோனேஷியா மாஸ்டர்ஸ்  பாட்மிண்டன் போட்டியில் சாய்னா கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின் இப்போது பட்டம் வெல்கிறார்.

ஜகார்த்தாவில் இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி நடந்து வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனையும் தரவரிசையில் 9-ம் இடத்தில் உள்ள சாய்னா நேவாலை எதிர்த்து களம் கண்டார் நம்பர் ஒன் வீராங்கனை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கரோலின் மரின்.

காயமடைந்து கீழே விழுந்த கரோலின் மரின் : படம் உதவி ட்விட்டர்

போட்டி தொடங்கியதில் இருந்த இரு வீராங்கனைகளும் ஆக்ரோஷமாக விளையாடினார்கள். ஆனால், கரோலின் மரின் தனது சிறப்பாக ஆட்டத்தால் முதல் 3 புள்ளிகளைப் பெற்றார். அதன்பின்பே சாய்னா தனது முதல் புள்ளிக்கணக்கைத் தொடங்கினார். இருவரும் ஒருவருக்கொருவர் சளைக்காமல் ஈடுகொடுத்து விளையாடினார்கள். ஆனால், முதல் செட்டில் சாய்னாவைக் காட்டிலும் வேகமாக முன்னேறிய கரோலின் 4-10 என்ற கணக்கில் முன்னணியில் இருந்தார். ஆனால், திடீரென பந்தை அடிக்க முற்பட்டபோது முழங்காலில் பிடிப்பு ஏற்பட்டு கீழே சரிந்தார்.

அதன்பின் ஆட்டம் நிறுத்தப்பட்டு கரோலின் மரினுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவரால் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டு, தான் போட்டியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் சாம்பியன் பட்டம் சாய்னாவுக்கு சூட்டப்பட்டது. அரையிறுதியில் சீனா வீராங்கனை ஹி பிங்ஜியாவோவை 18-21, 21-12, 21-18 என்ற கணக்கில் தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார் சாய்னா என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comment here