தமிழகம்

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற மகன் தூக்கிட்டு தற்கொலை – உடலை மீட்டு தர தாய் கோரிக்கை

Rate this post

வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்ற மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதால் உடலை மீட்டு தர தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி மேலவீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ராஜகோபால். இவர் தனது தாய் பத்மா மற்றும் அக்கா தனப்பிரியா ஆகியோருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கத்தாருக்கு நாட்டுக்கு லாண்டரி வேலைக்கு சென்றுள்ளார்.

மகன் உடலை மீட்டு தர தாய் கோரிக்கை

இந்நிலையில் நேற்று ராஜகோபால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டதாக அவரது வீட்டிற்கு தகவல் வந்துள்ளது.

திடீரென தனது மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

தனது இறந்த தனது மகனின் உடலை தமிழக அரசு பெற்று தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

Comment here