இந்தியா

வெள்ளிச் செப்பேடு

செங்கல்பட்டு கோதண்டராமசாமி கோயிலில் தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை ஒரு வெள்ளியிலான ஆவண ஏட்டைக்கண்டுபிடித்தது
அது கி.பி.1886 ஆண்டில் தமிழில் எழுதப்பட்ட ஒரு ஆவணம் .

அதில் இருந்த செய்தி
விக்டோரியா மகாராணியின் 50வது ஆண்டு நிறைவு விழா அன்னதானம் வழங்கப்பட்டும், இலவச சேலை, வேஷ்டிகள் வழங்கப்பட்டும் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் ராணியின் பெயர்ச் சிறப்பிற்காக கோயில தர்ம பரிபாலகர் மா.குப்புச்சாமி நாயுடுவின் குமாரரும் மாவட்ட நீதிமன்ற ரீடருமான மா.ராமானுஜ நாயுடு ரூ.300 மதிப்புள்ள தங்கக் காசு மாலை ஒன்றினை கோதண்டராமசாமிக்கு வழங்கியுள்ளார். இச்செய்தி இவ்வெள்ளிப் பட்டையத்தில் பொறிக்கப்பட்டுள்ளது.

அப்போது வாழ்ந்த மக்களின் ஒருவரான நீதிமன்ற ரீடரான மா.ராமானுஜ நாயுடு தனது ராஜ விசுவாசத்தை
காண்பிக்க ரூ 300 க்கு ஒரு தங்ககாசுமாலை யை செங்கல்பட்டு கோதண்டராமசாமி கோயிலுக்கு வழங்கி அதை தனது பெருமையைக்காட்ட செப்பிலே பதிப்பிக்காமல் வெள்ளியில் பட்டயத்தில் பொறித்துள்ளனர் .

தங்கத்தில் ஒரு செப்பேட்டை அப்போதைய தஞ்சை நாயக்கர் தரங்கம் பாடியை தாரைவார்த்து தந்ததை செய்திஆக்கித்தந்ததை முன்பே ஒரு முறை எழுதியிருந்தேன் .
இப்போது வெள்ளியில் ஒரு ஆவண ஏடு .
.அப்போதெல்லாம் அதனை செழிப்புடன் நம் மக்கள் இருந்திருக்கிறார்கள்

இந்த செய்தியும் தமிழ் இணையக் கல்விக்கழகம் இணையத்தில் இடம்பெற்றதுதான் .படமும் அதில் இருந்ததுவே .
நன்றிகள் !

Comment here