கல்வி

வேளாண்மை/தோட்டக்கலை படிப்புகளுக்கு சமவாய்ப்பு எண் (Random Number) வெளியீடு

   வேளாண்மை/தோட்டக்கலை படிப்புகளுக்கு 

சமவாய்ப்பு எண் (Random Number) வெளியீடு
அண்ணாமலைப் பல்கலைக்கழக இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc. (Hons.) Agriculture) படிப்புக்கு 12373 விண்ணப்பங்களும், இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc. (Hons.) (Agriculture(Self Supporting)), படிப்புக்கு 3281 விண்ணப்பங்களும், தோட்டக்கலை(B.Sc. (Hons.)Horticulture) படிப்புக்கு 1768 விண்ணப்பங்களும் வேளாண் பட்டய படிப்புக்கு 1214 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 19 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. தோட்டக்கலை பட்டய படிப்புக்கு 599 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 9 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. பதிவு செய்யப்பட்டது. அவற்றில் 235 இளம் அறிவியல் வேளாண்மை (B.Sc. (Hons.) Agriculture) விண்ணப்பங்களும், 62 இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc. (Hons.) (Agriculture(Self Supporting)), 20 தோட்டக்கலை (B.Sc. (Hons.)Horticulture) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டன.
இளம் அறிவியல் வேளாண்மை(B.Sc. (Hons.) (Agriculture)), இளம் அறிவியல் வேளாண்மை (சுய நிதி) (B.Sc. (Hons.) (Agriculture(Self Supporting)), இளம் அறிவியல் தோட்டக்கலை(B.Sc.(Hons.)Horticulture) படிப்புகளுக்கான “சமவாய்ப்பு” எண்ணை (Random Number) துணைவேந்தர் பேராசிரியர் முனைவர். வே. முருகேசன் வெளியிட்டார். மாணவர்கள் பல்கலைக்கழக இணையதளம் www.annamalaiuniversity.ac.in.-ல் தங்களது “சமவாய்ப்பு” எண்ணை (Random Number) தெரிந்து கொள்ளலாம்.
நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் மாணவர் சேர்க்கை ஆலோசகர் பேராசிரியர் முனைவர் T.ராம்குமார் வரவேற்றார். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பதிவாளர்(பொ) முனைவர் நா.கிருஷ்ணமோகன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) வெ.செல்வநாராயணன், வேளாண்புல முதல்வர் முனைவர் திருமதி சாந்தா கோவிந்த், பல்வேறு துறைத்தலைவர்கள், பல்கலைக்கழக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் பின்னர் வெளியிடப்படும். மாணவர்கள் முற்றிலும் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாணவர்கள், மேல் நிலை (H.S.C) படிப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலும் தமிழக அரசின் இட ஒதுக்கீடு விதிப்படியும் சேர்க்கைக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாள் தரவரிசை பட்டியல் வெளியிட்ட பின்னர் அறிவிக்கப்படும். கலந்தாய்வு அட்டவணை மற்றும் கலந்தாய்வுக்கான அனுமதி கடிதத்தை தகுதியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கும், தகவல்களுக்கும் பல்கலைக்கழக இணைய தளம் www.annamalaiuniversity.ac.in பார்க்கவும். தொடர்புக்கு auadmissions2019@gmail.com மேலும் உதவி மைய தொலைபேசி எண்ணில் (04144-238349) தகவல்கள் பெறலாம்

Comment here