விளையாட்டு

ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் – ரிக்கி பாண்டிங் பேட்டி

Rate this post

T20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 16-ந்தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்க உள்ளது. இப்போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

இந்திய அணிக்கு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா திரும்பியுள்ளார். அதே போல் காயத்திலிருந்து மீண்டு வந்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி உலக கோப்பைக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.

அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில் –

ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா முன்னிலையில் உள்ளார். பும்ரா ஆஸ்திரேலியாவில் ஓரளவு கிரிக்கெட் விளையாடி உள்ளார். ஷகீன் ஷா அப்ரிடியை விட பும்ரா ஆஸ்திரேலியாவில் அதிகமாகவும், பெரிய போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதனால் உலக கோப்பையில் அப்ரிடியை விட பும்ரா சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன் என்றார்.

Comment here