இந்தியா

ஹிமாச்சல பர்வனூ

ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் ஆகியவற்றின் எல்லையிலுள்ள ஒரு அற்புத மலை வாசஸ்தலமாக விளங்கும் பர்வனூ, பசுமையான தாவரங்களால் சூழப்பட்டுள்ள, ஒரு சிறிய நகரம். ஒரு சிறிய கிராமமாக இருந்த பர்வனூ, ஹிமாச்சலப் பிரதேசம் மாநில அந்தஸ்தை பெற்ற பின், ஒரு பெரிய தொழில் நகரமாக விளங்குகிறது. வரலாற்றுப்படி, பர்வனூ என்ற பெயர், ஹரியானா அருகில் உள்ள ஒரு கிராமமான ஊஞ்ச பர்வனூ என்ற பெயரிலிருந்து வந்தது. பல மலைகள் மற்றும் பழத்தோட்டங்கள் உள்ள இடமாதலால், பர்வனூ ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது.

ஒரு பெரிய தொழில் நகரம் என்று அழைக்கப்படும், பர்வனூ பல தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறைகளை கொண்டுள்ளது. HPMC – யின்  மிகப்பெரிய பழ செயலாக்க பிரிவு இங்குதான் உள்ளது. மோட்டார் பாகங்கள், பிளாஸ்டிக் மற்றும் பழங்கள் கெட்டுப்போகாமல் பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் நகர மக்களில் 80 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். பர்வனூவின் பழத்தோட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் பழங்கள் அனைத்தையும் ஜெல்லி வகைகள், ஜாம் மற்றும் பழச்சாறு தயாரித்தல் போன்றவை செய்யப் பயன்படுத்துகின்றனர்.

பல சமய மையங்கள், தோட்டங்கள், மற்றும் ஓய்வு விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. பின்ஜோரேயின்  புகழ்பெற்ற முகலாய பூங்காக்கள் இலக்கிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்த ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். மிகப் பிரபலமான கற்றாழைத் தோட்டம் 1987 ஆம் ஆண்டு இங்கு நிறுவப்பட்டது. ஆசியாவின் மிகப்பெரிய கற்றாழைத் தோட்டம் என கருதப்படும் இது சுமார் 7 ஏக்கர் பரப்பளவை உள்ளடக்கியுள்ளது. டிம்பர் ட்ரேல் என்ற புகழ்பெற்ற ஓய்வு விடுதியை கேபிள் கார் மூலம் அடையலாம். ஆண்டு முழுவதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகளை இந்த இடம் ஈர்க்கிறது. கேபிள் காரில், 10 முதல் 12 பயணியர் தங்கும் அளவிற்கு அறை உள்ளது. மேலும் விடுதியிலிருந்து பயணிகளை மலை உச்சிக்கு, ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கு வழியே கொண்டு செல்கிறது. கடல் மட்டத்திலிருந்து 5000 அடி உயரத்தில் உள்ள இந்த இடம் அடர்ந்த பைன் காடுகளால் சூழப்பட்டுள்ளது. பர்வனூவிற்கு பயணிப்பவர்கள், ராணுவ நகரம் என்றழைக்கப்படும் தக்க்ஷையையும் காணலாம். இது நாட்டின் பழமையான பிரிட்டிஷ் கண்டோன்மெண்டுகளில் ஒன்றாகும்.

Comment here