ஹெல்மெட் இல்லையேன்றால் பூஜை கிடையாது

Rate this post

ஹெல்மெட்டை அணிந்து சென்றால் உயிர் பாதுகாப்பு என்பதை அரசுகளும், நீதிமன்றங்களும், காவல் துறையும் பலவாறு எடுத்துக்  கூறியும் இன்னும் முழுமையாக  இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் பின்பற்றுவதில்லை. ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த, எத்தனை வழிகளை பின்பற்ற வேண்டியுள்ளது. இதற்க்கு சமீபத்திய உதாரணம் ஓடிஸா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள ஜகத்சிங்பூர் சரளா  ஆலயமாகும். புதிதாக வாகனம் வாங்கியவுடன் இந்த ஆலயத்திற்கு சென்று பூஜை செய்வது இங்குள்ள பெரும்பாலானவர்களின் வழக்கமாகும். குறிப்பாக அமாவாசை தினங்களில் இந்த ஆலயத்தில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும்.. வாகனங்களுக்கு பூஜை போடுவதற்கு வசதியாக கோயிலின் உள் பகுதி வரை வாகனங்களை ஒட்டி செல்ல முடியும். அர்ச்சகர் வந்து மாலை போட்டு வாகனத்திற்கு பூஜை செய்வது வழக்கம். சமீபத்தில் இந்த ஆலய நிர்வாகம் ஒரு அறிவிப்பு பலகையை கோயிலில் வைத்துள்ளது. அதாவது இருசக்கர வாகன ஓட்டிகள் பூஜை போடுவதற்கு வாகனத்தை கொண்டு வரும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்திருக்கவேண்டும். ஹெல்மெட் இல்லையெனில்  பூஜை நடத்தப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்த பல்வேறு பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்திவந்த காவல் துறை.  இப்போது மத ரீதியாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்துள்ளது. இதற்காக ஆலய நிர்வாகத்திடம் பேச்சு நடத்தி ஹெல்மெட் இல்லாமல் வரும் வாகனங்களுக்கு பூஜை போட வேண்டாம் என கேட்டுகொண்டது. பக்தர்களின் நலன் கருதி கோயில் நிர்வாகமும் இதற்கு ஒப்புகொண்டது. மகர சங்கராந்தியிலிருந்து ஹெல்மெட் இல்லாத வாகனங்களுக்கு பூஜை போடுவதில்லை என நிர்வாகம் அன்றைய தினம் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 20   வாகனங்களுக்கு பூஜை மறுக்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தினசரி இந்த கோயிலுக்கு சராசரியாக 50  வாகனங்கள் பூஜைக்காக  கொண்டுவரப்படுகிறது. விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கும்  என்று கோயில் முதன்மை பூசாரி சுதம் சரண் பாண்டா தெரிவித்துள்ளார்.  2016  ம் ஆண்டு ஜகத்சிங்பூர் மாவட்டத்தில் மட்டும் 111 பேர் உயிரிழந்துள்ளனர். கடுமையான சட்டங்களால் நிறைவேற்ற முடியாத பல விஷயங்கள் மதம் சார்ந்த நம்பிக்கைகள் மூலம் நிறைவேற்றப்படும். இதை போல் ஆங்காங்கு உள்ள கோயில்களில் ஹெல்மெட்டின் அவசியத்தை வலியுறுத்தினால். விபத்துகள் மூலம் ஏற்படும் உயிரிழப்புக்களையும் தடுக்கலாம். நல்ல காரியத்தை  யார் செய்தால் என்ன.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*