ஆஞ்சநேயருக்கு செந்தூரம் அணிவது ஏன்?

Rate this post

ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

ஒரு முறை சீதாதேவி தனது நெற்றியில் செந்தூரம் இட்டுக் கொள்வதை பார்த்தார் அனுமன். இதனை பார்த்ததும் சீதாதேவியிடம் சென்று, “அன்னையே! தாங்கள் நெற்றில் செந்தூரம் இடுவதற்கான காரணம் என்ன?” என்று வினவினார்.

அதற்கு சீதாதேவி, “எனது கணவன் ராமன் நீண்டகாலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்பதற்காகவே நான், நெற்றியில் செந்தூரம் இடுகிறேன்” என்று பதிலளித்தார். அதனை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அனுமன், கருணைக் கடலான ராமர் என்றும் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக தன் உடல் முழுவதும் செந்தூரத்தைப் பூசிக் கொண்டார்.

இதனால் தான் ஆஞ்சநேயர் கோவில்களில் அவருக்கு அபிஷேகம் செய்து முடித்ததும் எண்ணெயுடன் செந்தூரம் கலந்து உடல் முழுவதும் பூசுகின்றனர். அதை பக்தர்கள் இட்டுக் கொள்ள தருகின்றனர்…..
நன்றி…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*