அரசியல்

10 சதவீத இட ஒதுக்கீடு-மத்திய அரசு வெளியிட்டுள்ள வரையறைகளை ஏற்க முடியாது

Rate this post

பொதுப்பிரிவினரில் பொருளா தார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கு வதற்காக மத்திய அரசு வரையறை செய்துள்ள விதிகள் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்றும் நாடாளுமன்றத்தில் பொருத்தமான முறையில் விவாதித்து நிறை வேற்றாமல் மேற்கொள்ளப்பட்டுள்ள தன்னிச்சையான நடவடிக்கை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சமும் அதற்கு கீழுமுள்ள குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் இடஒதுக்கீட்டு பலனை பெறலாம்; மேலும் ஐந்து ஏக்கர் அல்லது அதற்கும் அதிகமான விவ சாய நிலம் வைத்திருப்பவர்கள், ஆயிரம் சதுரடி அல்லது அதற்கும் அதிகமான அளவில் வீட்டுமனை வைத்திருப்பவர்கள், நகராட்சி எல்கைக்குள் 100 சதுரமீட்டர் அல்லதுஅதற்கும் அதிகமான பரப்பு கொண்ட வீடு வைத்திருப்பவர்கள், நக ராட்சி அல்லாத பகுதிகளில் 200 சதுரயார்டு (1 சதுர யார்டு = 8.99சதுரடி) அல்லது அதற்கும் அதிகமான பரப்பு கொண்டவீடு வைத் திருப்பவர்கள் – ஆகியோருக்கு இடஒதுக்கீட்டு பலன்கள் இல்லை என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

இது, பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதியினர் என்ற அடிப்படை கோட்பாட்டையே போலி த்தனமானதாக மாற்றுவதாகும். மத்திய அரசு குறைந்தபட்சக் கூலிரூ.18 ஆயிரம் என்ற அளவினைக் கூட ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. ஆனால் இங்கே இடஒதுக்கீட்டு பலனை பெறுவதற்கு மாதம் வருமானம் கிட்டத்தட்ட ரூ.70 ஆயிரம் இருப்பவரையும் சேர்த்துக் கொள்ளலாம் என்கிறது. இந்த வரை யறையானது பொருளாதாரரீதியாக பின்தங்கிய பகுதியினருக்கு எந்த பலனும் சென்றடையாமல், அந்த பலன்கள் அனைத்தையும் ஏற்கெனவே வசதியாக இருப்பவர்களே எடுத்துக் கொள்வதற்கே வழிவகுக்கும்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தோர் என்று வகைப் படுத்துவதற்கு என்ன வரையறை பின்பற்றப்படுகிறதோ அதே வரையறையை இங்கு அரசு பயன்படுத்தியிருப்பது முற்றிலும் தவறானதாகும். இதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்பவர்கள் சமூகரீதியாக பின்தங்கியவர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்; எனவே அவர்களுக்கு உருவாக்கும் வரையறை என்பது பொது பிரிவினருக்கு பொருந்தாது.

வரையறை தொடர்பான முன்மொழிவு எதையும் நாடாளுமன்றத்தில் அரசு தாக்கல் செய்யவில்லை. ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கிற நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஜனவரி 31 அன்று மீண்டும் அவை கூட இருக்கிறது; ஆனால் அதற்கு கூட காத்திருக்காமல் மத்திய அரசு தன்னிச்சையான முறையிலும் சட்டவிரோதமான முறையிலும் ஒரு நிர்வாக உத்தரவின் மூலமாக இடஒதுக்கீடு வரையறை குறித்த அறிவிக்கையை வெளியிட்டி ருக்கிறது.

நாடாளுமன்றத்தில் பொருத்த மான முறையில் விவாதித்து சட்டம்இயற்றாமல் இந்த நிர்வாக உத்தரவை அமலாக்க அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வற்புறுத்துகிறது

Comment here