ஆன்மிகம்பொது

10  நாட்கள் மட்டுமே திறக்கப்படும் அம்மன் கோயில்

Rate this post

 

கர்நாடகா மாநிலம் ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோயில் உள்ளது. இந்த கோயிலில் வீற்றிருக்கும் அம்மன் பெயர்  ஹாசனாம்பா தேவி. ஹாசனாம்பா கோயில் இருப்பதால் தான் இந்த நகரம் ஹாசன் நகரம் என்று அழைக்கபடுக்றது. மேலும் இக்கோயில் சிறப்புகளையும் தகவல்களையும் கேட்கும் பொது மெய்சிலிர்கிறது. இக்கோயில் ஒவ்வொரு ஆண்டும் 10  நாட்கள் மட்டுமே பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்காக திறந்து விடப்படுகின்றது. அக்டோபர் மதம் 25  ந்  தேதியிலிருந்து நவம்பர்  4 ந் தேதி வரை பக்தர்கள் ஹாசனாம்பா அம்மனை தரிசனம் செய்யலாம். 10  நாட்களும் நடை சாத்தப்படாமல் இரவு முழுவதும் திறந்தே இருக்கும்  24 ந் தேதியே கோயில் திறக்கபட்டாலும் அன்றும் கோயில் நடை சாத்தபடும் 5  ந் தேதியும்  சடங்குகள் நடைபெறுவதால்  அந்த தேதிகளில் பக்க்தர்களுக்க் அனுமதி இல்லை. இத்தகைய புகழ் பெற்ற அம்மனுக்கு சுமார் 12 ம் நூற்றாண்டில் கிருஷ்ணப்ப நாயக்கர்  பாளையக்காரரால் கோயில் கட்டப்பட்டது. ஹாசனாம்பா கோயில் ஒவ்வொரு ஆண்டும் மூடப்படும் நவம்பர்  5  ந்தேதி பலி பட்யாமி என்ற தினத்தில் கோயிலில் தீபம் ஏற்றபடுகிறது. இத் தீபமானது அடுத்த ஆண்டு அஸ்வினி பூர்ணிமாவை தொடர்ந்து வரும் வியாழக்கிழமை கோயில் நடை திறக்கப்படும்  நாள் வரை அணையாமல் எரிந்து கொண்டிருக்குமாம். ஹாசனாம்பா  கோயில் நடை சாத்தப்படும் இறுதி நாளன்று சாத்தப்படும்  பூக்கள், மாலைகள் எல்லாம் அடுத்த ஆண்டு வரை வாடாமல் இருக்கும்  என்று பக்தர்கள் நம்புகிறார்கள்  இதனால் இந்த அதிசயத்தை காண்பதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை கோயில் திரகபடும் நாளில் ஹாசனாம்பா அம்மனை தரிசிக்க வருகை தருகின்றனர்.

Comment here