10 நாளில்… நிச்சயம்… விவசாயிகள் கடன் தள்ளுபடி உத்தரவு

Rate this post

போபால்:
நிச்சயம்… 10 நாளில் நிச்சயம்… விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் கமல்நாத்.

ம.பி. முதல்வரை தேர்வு செய்வதற்கான எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று இரவு வரை நீடித்தது. முடிவில் கமல்நாத் முதல்வராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று பதவியேற்கிறார். அவருக்கு கவர்னர் ஆனந்தி பென்பட்டேல் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்நிலையில் முதல்வராக தேர்வு பெற்ற பின் முதன்முறையாக டி.வி.சானலுக்கு கமல்நாத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த நவம்பரில் காங். தலைவர் ராகுல் தேர்தல் பிரசாரத்தின் போது காங். ஆட்சி அமைத்தவுடன் 10 நாட்களில் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என கூறினார். அதன்படி எனது தலைமையில் ஆட்சி அமைத்தவுடன் முதல் பணியாக விவசாயிகள் கடன் தள்ளுபடிசெய்ய உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*