ஆயுர்வேதம்

100 ஆண்டுகள் வாழ – நெல்லிக்காய்

100  ஆண்டுகள் வாழ – நெல்லிக்காய்

நெல்லிக்காய்களில்  பெருநெல்லி, அருநெல்லி, கருநெல்லி என்ற வகைகள் உள்ளன. இதில்  நாம் காண கிடைக்காதது. அருநெல்லியும், பெருநெல்லியும் எளிதில் கிடைக்கக் கூடியவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளை போல் பயன்படுத்தலாம். நெல்லிக்காயை அப்படியே பச்சையாகவும் சாப்பிடலாம், குழம்பு வைக்கலாம், ஊறுகாயகவும் பயன்படுத்தலாம், ஜூஸ்  ஆகவும் சாப்பிடலாம். நெல்லிக்கையை உலர்த்தியும் பயன்படுதலாம்.யாருக்கு எந்த வகை பிடிக்குமோ அந்த வகையில் சாப்பிடலாம். நெல்லிக்காயின் அருமைகளும் பெருமைகளும் அளவிடமுடியாதது. ஒருவர் ஒரு நாளைக்கு ஒரு நெல்லிக்காய் சாபிட்டுவந்தால் 100 வயது வரை வாழலாம்.     நெல்லிக் காயில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது சர்க்கரை நோயை கட்டுப் படுத்துகிறது,  கண் சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது, ரத்தசோகையை போக்குகிறது, குடல்புண்ணை ஆற்றுகிறது, சிறுநீரக எரிச்சலை குறைக்கிறது,உடல் சூட்டை தணிகிறது,  பல் நகங்களை பாதுகாக்கிறது, சருமத்தை பளபளப்பாக வைத்துகொள்ள உதவுகிறது,உடல் எடையை குறைக்க கூடியது, கெட்டகொழுப்பை அகற்றக்கூடியது, புற்றுநோயை தடுக்கும் வல்லமை பெற்றது, ஞாபகசக்தியை அதிகரிக்கக் கூடியது, ரத்தசிவப்பணுக்களை உற்பத்தி செயயகூடியது, இத்தகைய அரும் பணிகளை செய்யகூடிய நெல்லிக்கனி, பெண்களின் மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வெள்ளைபடுதல்,சினைப்பைகட்டி,தலைமுடிகொட்டுதல் ஆகியவற்றை தீர்க்கவல்லது. மேலும் ப்ரோட்டின்,புரதம்,இரும்பு, சுண்ணாம்பு  சத்துக்களை கொண்டது.  ஆறு சுவைகளில் ஐந்து சுவைகளை உடையது. பித்தத்தை தெளிவிக்கக்கூடியது.  நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்ட நெல்லிக்காய்  உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன்  நினைவாற்றல், புத்திக்கூர்மையை அதிகரிக்ககூடியது. பெண்கள் கற்பகாலங்களில் நெல்லிக்காயை ஒன்பது மாதங்கள் வரை  சாபிட்டுவந்தால்  தலைசுற்றல், வாநதிநிற்கும், நல்லபசி எடுக்கும், இப்படி பல்வேறு நன்மைகளை தரும் இந்த நெல்லிக்காய் எளிதில்  கிடைக்ககூடியது, விலை மலிவானது, பக்கவிளைவுகள் அற்றது. இப்படிப்பட்ட நெல்லிக்காயை  தினமும் ஒன்று என்று சாபிட்டுவந்தால்  100 ஆண்டுகள் வரை நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

Comment here