இந்தியா

111 மரங்களை நடும் கிராமம்

பெண் குழந்தையை காப்பாற்றும் உன்னத முயற்சியுடன் சுற்றுச்சூழலுக்கும் நன்மை விளைவிக்கும் வகையில் இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போதும் 111 மரங்களை நடுகின்றனர். மேலும் பிப்லான்ட்ரி கிராம மக்கள் பெண் குழந்தை வளர்ந்ததும் சிறந்த கல்வி கிடைக்கவேண்டும் என்பதற்காக அவர்கள் ஈடும் வருவாய் தொகையை வைப்பு நிதியாக மாற்றுகின்றனர்.  பெண் குழந்தை பிறந்ததும் கிராம மக்கள் ஒன்றிணைந்து மரங்களை நட்டு முறையாக பராமரிக்கின்றனர். பல ஆண்டுகளாக கால் மில்லியன் மரங்களை நட்டுள்ளனர். மேலும் இந்த கிராமத்தில் கற்றாழை வளர்ப்பிலும் ஈடுபட்டு அவற்றைக் கொண்டு ஜூஸ், ஜெல் ஆகிய பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்துகின்றனர். பல ஆண்டுகளாக பிப்லான்ட்ரி கிராம மக்கள் இவற்றை பின்பற்றியதால் அவர்களது வாழ்வாதாரத்திற்கான ஒரு வாய்ப்பாகவே இது மாறியுள்ளது.

Comment here