12 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!

5 (100%) 1 vote

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி திமுக கொறடா ஆர்.சக்கரபாணி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் கேட்டு சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

போன பிப்ரவரி மாதம் 18-ம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்களான ஓ.பன்னீர்செல்வம், ஆறுகுட்டி, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், கே.பாண்டியராஜன், மனோரஞ்சிதம், சரவணன், செம்மலை, சின்னராஜ், ஆர்.நட்ராஜ் ஆகிய 11 பேரும் முதல்வர் கே.பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பை கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவான அருண்குமார் கட்சியின் அனுமதியின்றி புறக்கணித்தார்.கட்சிக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க திமுக சார்பில் ஏற்கனவே சட்டசபை தலைவரிடம் மனு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் சட்டப்பேரவை தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை என்று ஆளுநரிடம் கடிதம் அளித்த டிடிவி தினகரன் ஆதரவாளர்களான தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவருக்கு அரசு கொறடா பரிந்துரை செய்த அன்றே 19 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, 3 வாரத்துக்குள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து திமுக கொறடா சக்ரபாணி செப்.26ம் தேதி வழக்கு தொடர்ந்தார். 18 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதே நேரம் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி இது பற்றி சட்டப்பேரவை தலைவர், பேரவைச்செயலர் ஆகியோர் அக்.13-க்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*