மருத்துவம்

முக யோகாசனம்!

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நமது உடலின் முழு சக்தியை முகம் காட்டிவிடும். நமது முகத்தில் 57 தசைகள் உள்ளன. நமது உடலின் தசைகளிலேயே மிகவும் பலமான தசை நமது தாடையில் உள்ள தசைதான். முதுமையால் மட்டுமே நமது முகம் களைஇழப்பதில்லை. நமது முகத்தின் தசைகளை பல பிணிகள் பாதிப்பதும் அதற்குக் காரணம். முகயோகாசனம் என்பது பதஞ்சலியோக முறையில் அஸ்தங்க யோகாசனமாகும். முகத்தின் அழகை பராமரிக்கும் பயிற்சி இது. யோகாசனத்தின் பயன்களை மத்திய ஆயுஷ்  அமைச்சகம் உலகம் முழுவதும் பரப்பி வருகிறது. இதன் காரணமாக ஜூன் 21 – ம் தேதி சர்வதேச யோகாசன தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. யோகாசனம் என்பது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது என்பதால் பெண்களின் அசோச்சம் கூட்டமைப்புப் பிரிவுகள் அனைத்தும் முக யோகாசனத்தை தங்களின் அமைப்பில் இணைத்துள்ளன. 100 நாடுகள் பங்கேற்ற 2016 மகளிர் பொருளாதாரப் பேரவையில் முக யோகாசனம் இடம் பெற்றிருந்தது.

மற்ற யோகாசனங்கள் போலவே முகயோகாசனப் பயிற்சியும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகளுக்கு கூடுதல் ஆக்சிஜன் கிடைக்கச் செய்து, உயிரணுக்கள் உருவாக உதவி, உடலின் தேவையை நிறைவு செய்கிறது. நமது மூளைக்கும் பினியல், பிட்யூட்டரி சுரப்பிகளுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதை எம். ஆர். – ஐ. ஸ்கேன் மூலம் அறிய முடிகிறது. நமது அன்றாட உயிரியல் சுழற்சியையும் ஹார்மோன்களின் சமன் பாட்டையும் பேணுவது இந்த சுரப்பிகள்தான். நமக்கு ஆரோக்கியமான – ஆழ்ந்த உறக்கத்தை கொடுப்பதிலும் நோய் தடுப்பு சக்தியை வழங்குவதிலும் ஹார்மோன் சுரப்பிகள் பிரதானப் பங்கு வகிக்கின்றன. நமது முகத்தின் தசைகளை எளிய முறையில் அசைப்பதன் மூலம் ஹார்மோன் சுரப்பிகளை ஊக்குவித்து அதன் மூலம் மூளையையும் நரம்பு மண்டலதையும் சுறுசுறுப்பாக்க முடியும். இதன் மூலம் நமது ஒருமுகப் படுத்தும் திறனையும், இதயம் மற்றும் நுரையீரல் செயல்பட்டையும் மேம்படுத்த முடியம்.

பதற்றத்தை தணிப்பதிலும் முக யோகாசனம் சக்தி வாய்ந்தது. முக யோகாசன அசைவுகள் நமது நெற்றி, கண்களின் இயக்கத்தை சீர்படுத்துவதால் பதற்றம், எதிர்வருவது பற்றிய கவலை, நடுக்கம் போன்ற தீமைகளில் இருந்து விடுவிக்கிறது. இதன் காரணமாக காமா அமினோபட்ரியிக் அமிலம் சுரந்து  நரம்பு மண்டலத்தை சீரமைத்து அதன் செய்லபாட்டை மேம்படுத்துகிறது.

நமது உடலின் தோல் சுருங்காமலும் தளர்ச்சி தடையாமலும் பாது காப்பது நமது தோலில் பரவியுள்ள கொலேகன் என்ற இயற்கையான திரவப் பொருள்தான். தோல்  சுருங்கும் பிரச்சினைக்கு முகயோகாசனம் சிறந்த தீர்வு என்கிறார் திசுக்களின் வளர்ச்சி மருத்துவர் டாக்கடர் பிரபு மிஸ்ரா. சாதாரணமாகக் காணப்படும் கண் வீக்கம், கண்ணுக்கடியில் குழிவிழுதல், கழுத்து தசைகளில் தளர்ச்சி போன்ற சாதாரணமான குறைபாடுகளுக்கு  பிரத்தியேக முகயோகாசனப் பயிற்சி மூலம் தீர்வு காண முடியும். முகத்தில் ஏற்படும் வேதனை, நடுக்கம் தசைகளின் படபடப்பு, நரம்புகளின் இறுக்கம், பதற்றம், முகத்தில் சலனம் குறைதல் ஆகிய தசைகள் பிரச்சினைக்கு முக யோகாசனத்தை டாக்டர்களும், சிகிச்சையாளர்களும் பயன்படுத்துவதை நான் பாரத்திருக்கிறேன் என்கிறார் மும்பை யோகாசனப்பயிற்சி ஆசிரியர் மினால் போட்னிஸ். சுரக்கும் உமிழ்நீர் ஒருவரின் ஆரோக்கியத்துக்கு அறிகுறி. இந்த உமிழ்நீர் சுரப்பை முகயோகாசனம் ஊக்குவிக்கிறது.

முக யோகாசனம் புற்று நோய்க்கான காரணிகளையும் போக்கிவிடும் என்கிறார் டாக்டர் பிரபு மிஸ்ரா. முதுமை காரணமாக மூளையில் ஏற்படும் பாதிப்பினால்  ஏற்படும் மறதி, மனதளவில் ஏற்படும் பாதகமான நிலை, ஆகியவற்றை இதனால் தடுக்க முடியும். நரம்பு மண்டல கோளாறு எதுவாக இருந்தாலும் தடுக்கப்படா விடில் மேலும் மோசமாகிவிடும். முக யோகாசன சிகிச்சையை செய்து பார்க்கும்படி நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்களும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர்களும் மூளைக்கட்டி நோயாளிகளுக்கும் அவர்களைப் பராமரிப்பவர்களுக்கும்  ஆலோசனை கூறுகிறார்கள்.

மூளைக்கட்டி அறுவை சிகிச்சைக்குப் பிறகும் அவர்கள் மறுவாழ்வுக்கும்  ஸ்டெம்  உயிரணு சிகிச்சையுடன் யோகாவையும் மேற்கொள்வதை நான் ஆலோசனையாக்க் கூறுகிறேன் என்கிறார் டாக்கடர் மிஸ்ரா.

முகயோகாசனம் என்பது என்ன? மினால் போட்னிஸ் பின்வருமாறு கூறுகிறார்: வறட்டுப் புன்னகை செய்யுங்கள் வாயில் புன்னகை புரியும் முனைகளை காதோரம் வரை இறுக்கமாக்கி கொள்ளுங்கள். அதே நிலையில் 15 வரை எண்ணுங்கள், பலவந்தமாக மூச்சை இழுத்து விடுங்கள், அடுத்த 10 நிமிடம் மூச்சு வாங்குவதை சுலபமாக்குங்கள், இதே போல் அடுத்தடுத்து 5 முறை செய்யுங்கள், இது உங்கள் கன்னம், நாடித் தசைகளை பக்குவப்படுத்தி வலுப்படுத்தும். ஒவ்வொருவரின் மருத்துவ ரீதியான நிலை அடிப்படையில் தனித்தனிப் பயிற்சி கற்றுத் தரப்படுவது அவசியம்.

 நரம்பியல் நிபுணர்களும் தோல் சிகிச்சை நிபுணர்களும் முக யோகாசனத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். மும்பை லோக்மானிய திலகர் மருத்துவமனை நரம்பியல் பிரிவு தலைமை மருத்துவர் டாக்டர் அலோக் ஷர்மா பின்வருமாறு கூறுகிறார்:  நவீன மருத்துவம் மாற்று மருத்துவம் இரண்டையும் கூடுதலாக கையாள்வது அவசியம். இந்த ஒரு முகப்படுத்தப்பட்ட சிகிச்சை ரத்த ஓட்டத்தை அதிகரித்து தசைகள் அந்த சிகிச்சையின் பலனைப் பெருவதற்கு ஊக்குவிக்கும் என்கிறார். வயிற்றுக் கோளாறு போன்ற சாதாரண பிணிகளுக்கும் கூட இந்த சிகிச்சை நல்ல பலன் அளிக்கும். யோகா நிபுணர்கள், உடற்பயிற்சியாளர்கள், முக அழகு நிபுணர்கள், பேச்சு சிகிச்சை அளிப்போர் அவர்களின் மருத்துவ சிகிச்சையுடன் யோகா சிகிச்சையையும் சேர்த்து மேற்கொள்கிறார்கள். வரம்பு மீறாமலும் நிபுணர்கள் ஆலோசனையுடனும்தான் இந்தப் பயிற்சி செய்ய வேண்டும்.

நமது உடலில் இயற்கையாகவே உள்ள நோய் தடுப்பு சக்திக்கு முக யோகாசனம் மிகவும் பயன்தரும். நரம்பு மண்டலக் கோளாறு (ALS)  அதிகமானால் அது பேச்சுத் திறனையும் உணவு விழுங்குவதையும் சுவாசத்தையும் கூட பாதிக்கும். இந்தப் பாதிப்புக்குள்ளானவர்கள் முதலில் தெளிவாகப் பேச முடியாது, நாளடைவில் பேசும் திறனையே இழந்து விடுவார்கள். முகம், வாய், கழுத்து மற்றும் கபாலத் தசைகளை இந்த முக யோகாசனம் உறுதிப்படுத்தக் கூடியது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஆக்சிஜன் எடுத்துச் செல்லப்படுவதும் அதிகமாகி புத்துணர்ச்சி கிடைக்கும். உதடு, கன்னம் மற்றும்  நாக்குப் பயிற்சி மூலம் சரளமாகப் பேச வைக்க முடியும், விழுங்குவதில் உள்ள சிரம் போய்விடும் என்கிறார் இந்த நோயாளிகள் மறுவாழ்வு ஆலோசகர்.

Comment here