18 வயதுக்கு குறைவான பெண்ணை திருமணம் செய்து உறவுக் கொண்டால் அது பலாத்காரமே! – சுப்ரீம் கோர்ட் சுரீர்!

5 (100%) 1 vote

15 முதல் 18 வயதுக்குள் உள்ள மைனர் பெண்ணை திருமணம் செய்து அவருடன் உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாகவே கருதப்படும் என்று உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

15 வயதுக்கு மேலுள்ள மைனர் பெண்களை திருமணம் செய்து உறவு கொண்டால் அது பாலியல் பலாத்காரமாக கருதப்படாது என்று இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 375 கூறுகிறது. இதை உச்சநீதிமன்றத் தீர்ப்பு மாற்றியமைத்துள்ளது. இனி 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவருடன் உறவு கொண்டால், அவர் புகார் அளிக்கும் பட்சத்தில் அது பாலியல் பலாத்கார குற்றமாகவே கருதப்படும்.

அதேசமயம், பாதிக்கப்பட்ட பெண்ணோ, அவருடைய ரத்த சொந்தங்களோ புகார் அளிக்காத பட்சத்தில் அதில் யாரும் தலையிட முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

நீதிபதிகள் மதன் பி லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.பெண்களின் திருமண வயது 18 என்று மற்ற அனைத்து சட்டப்பிரிவுகளும் ஏற்றுக்கொண்டுள்ளன. எனவே, பாலியல் பலாத்காரத்துக்கான குற்றவியல் சட்டப்பிரிவு 375லிலும் மாறுதல் செய்யப்பட வேண்டியது அவசியம் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*