தமிழகம்

19 வது நாளான இன்று அத்திவரதர்

19 வது நாளான இன்று அத்திவரதர் மஞ்சள் நிறத்தில் பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி 48 நாட்கள் பக்தர்களுக்கு அத்திவரதர் 38 நாள் சயன கோலத்திலும் பத்து நாட்கள் நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் 17 வது நாளான இன்று அதிகாலை 5 மணியில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர் அத்திவரதர் மஞ்சள் நிறத்தில் பட்டு உடுத்தி பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஏலக்காய் மாலை தாமரைப்பூ மல்லிப்பூ உள்ளிட்ட பூக்களால் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றிலும் வசந்த மண்டபம் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் இதனை ஏராளமானோர் அதிகாலை முதல் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் கழிவறை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர் வரிசையில் நிற்க கூடிய பொது மக்களுக்கு குடிநீர் வழங்கவும் 500 பேர் நியமிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருகின்றனர் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து 30 மினி பேருந்துகள் இயக்கப்பட்டு கட்டணமாக 10 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு கோவில் அருகே பக்தர்களை இறக்கி விட்டு விடுகின்றனர் போலீசார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

விஐபி தரிசனம் சொல்லக்கூடிய பக்தர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட அனுமதி சீட்டு பெற்று vip தரிசனத்தில் செல்ல வேண்டும் எனவும் நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் கண்டிப்பாக அனுமதிக்க மாட்டார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டிருக்கிறார் அதேபோல் போலி நுழைவுச்சீட்டு வைத்தவர்கள் தரிசனம் செய்ய வந்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இதுவரை 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

Comment here