ஆயுர்வேதம்இல்லறம்குறுகிய செய்திபொதுமருத்துவம்வாழ்க்கை நலன்

உடலுறவை சீராக்கும் மாதுளை

Rate this post

மனிதர்கள் உடலுறவின் போது ஏற்படும் பிரச்சனைகளை களைந்து, சீராக்கும் முக்கிய பணியை மாதுளை பழம் செய்து வருகிறது.

மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக உடலுறவு இருந்து வருகிறது. மன அழுத்தம், வாழ்க்கையில் விரக்தி போன்றவை பெரும்பாலும் உடலுறவு சீராக இல்லாததால் ஏற்பட்டு வருகிறது. இதனை, மாதுளை பழம் எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது, ஆண்கள் தான் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும். அதனுடன், மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதய ஆரோக்கியம் மாதுளை இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைப்பதால், இதய பிரச்சனைகள் வருவது குறையும். ஆகவே ஆண்கள் மாதுளையை அடிக்கடி உட்கொள்வதன் மூலம் இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ஆய்வு ஒன்றில் விறைப்புத்தன்மை பிரச்சனைக் கொண்ட ஆணுக்கு மாதுளை ஜூஸ் குடித்து அப்பிரச்சனை குறைந்திருப்பது தெரிய வந்தது. எனவே, ஆண்கள் மாதுளையை அன்றாடம் சிறிது உட்கொண்டு வருவது, உடலுறவின்போது, சிறப்பாக செயல்பட உதவும். மாதுளையை ஆண்கள் உட்கொண்டு வந்தால், அவர்களின் விந்தணுவை உற்பத்தி செய்யும் புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும், மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.

Comment here