உலகம்சினிமாபிரத்யகம்

1919-ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட இந்திய மவுனத்திரைப்படத்தை பிரான்சிடமிருந்து வாங்கியது இந்தியா

bilwamangal_2978543g

பில்வமங்கல் என்ற 1919-ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மவுனத் திரைப்படத்தை பிரான்சிடமிருந்து இந்திய தேசிய திரைப்பட காப்பகம் வாங்கியுள்ளது.

இந்திய திரைப்பட பாரம்பரியத்தைக் காக்கும் திட்டத்தில் தேசிய திரைப்படக் காப்பகம் தீவிரம் காட்டி வரும் நிலையில் ‘பில்வமங்கல்’ மவுன திரைப்படத்தை வாங்கியது மிக முக்கியமாக கருதப்படுகிறது.
இத்திரைப்படத்தை கொல்கத்தாவின் எல்பின்ஸ்டொன் பயாஸ்கோப் நிறுவனம் அப்போது தயாரித்தது. பிற்பாடு இதுவே மதன் தியேட்டர்ஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. பில்வமங்கல் திரைப்படத்தை இயக்கியவர் ருஸ்டோம்ஜி தோதிவாலா ஆவார். பிரான்சிடமிருந்து தற்போது தேசிய திரைப்படக் காப்பகம் 594 மீட்டர் படச்சுருளைப் பெற்றுள்ளது. அதாவது 28 நிமிடங்கள் ஓடும் காட்சிக்கான படச்சுருள் கிடைத்துள்ளது. உண்மையில் இந்தப் படம் 12,000 அடி நீளமாகும்.இதற்குப் பதிலாக பரஸ்பர புரிதலின் அடிப்படையில் 1931-ம் ஆண்டின் ஜமாய் பாபு என்ற இந்திய மவுனத்திரைப்படத்தின் டிஜிட்டல் பிரதியை பிரான்சிடம் அளிக்கிறது என்.எப்.ஏ.ஐ. தேசிய திரைப்படக் காப்பகம் கடைசியாக 1996-ம் ஆண்டு கோல்ஹாபூரிலிருந்து முர்லிவாலா, சதிசாவித்ரி, மாயாபஜார் போன்ற மவுனத்திரைப்படங்களை வாங்கியது. 1913 முதல் 1932 வரை சுமார் 1,300 மவுனத்திரைப்படங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அழிந்து விட்டன. தற்போது முழுமையாக இல்லாவிட்டாலும் 28 படங்களை தேசிய திரைப்பட காப்பகம் பாதுகாத்து வருகிறது.

Comment here