சினிமா

2 வாழைப்பழ விலை ரூ.442.50 நடிகரின் வீடியோவால் விசாரணைக்கு உத்தரவு

சண்டிகர்

விஸ்வரூபம் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் ராகுல் போஸ். இவர் நடிகர் மட்டுமல்லாமல் இயக்குனர், சமூக ஆர்வலர் என்று பன்முக அடையாளம் கொண்டவர். அண்மையில் இவர் சண்டிகருக்கு ஒரு ஷூட்டிங்கிற்காக சென்றுள்ளார். அப்போது ஐந்து நட்சத்திர ஒட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். அங்கு உடற்பயிற்சி முடிந்து வாழைப்பழம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால், வாழைப்பழத்துடன் வந்த பில் இவருக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துள்ளது.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவாகவே பதிவு செய்து வெளியிட்டுள்ளார் ராகுல் போஸ்.

அதில், “நான் சண்டிகரில் ஒரு ஜேடபிள்யூ மாரியட் என்கிற ஓட்டலில் தங்கியிருக்கிறேன். ஜிம்மில் பயிற்சி செய்து கொண்டிருந்த போது இரண்டு வாழைப்பழங்கள் கேட்டேன். எனக்குக் கொடுத்தார்கள். அதற்கான ரசீதைப் பாருங்கள்” என்று ரசீதைக் காட்டுகிறார். அதில் இரண்டு பழங்களுக்கான விலை, ஜிஎஸ்டியோடு சேர்த்து ரூ. 442.50 என்று போடப்பட்டுள்ளது. “இவற்றுக்கு நான் தகுதியானவனா தெரியவில்லை” என்று கூறி உள்ளார்.

Comment here