‘கஜ’ நாகப்பட்டினத்திற்கு138km

Rate this post

‘கஜ’ நாகப்பட்டினத்திற்கு138km தொலைவில் (தற்போதைய இணைய அளவின் படி 170km) மையம் கொண்டுள்ளது. இப்புயல் சின்னம் நாம் காலையில் தெரிவித்த வண்ணம், சற்று கிழக்கு நோக்கி (சுமார் 30km) நகர்ந்து பின்னர் மேற்கு தென்மேற்கு திசை நோக்கி நகர துவங்கியுள்ளது. அதன் பின்னரே இதன் பாதை முடிவுக்கு வந்துள்ளது.

🌊 *Forecast:*
தற்சமயம் இது சுமார் 22 km வேகத்தில் மேற்கு தென்மேற்கு திசையில் நகர்ந்து தற்போது கடும் புயலாக (Severe Cyclonic Storm) மாறி யுள்ளது (இதன் central pressure 995hpa ஆகும். இப்புயல் சின்னம் *கடலூருக்கும் பாம்பனுக்கும்* இடையே இன்று இரவு கரை கடக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. (தற்போதைய நிலவரப்படி உத்தேசமாக, நாகப்பட்டினம்-வேதாரண்யம், கோடியக்கரை, அருகே கரை கடக்க வாய்ப்புள்ளது) மேலும் Land fall area வினை இப்புயல் நெருங்கும் போது கடலூர், புதுச்சேரி, நாகை, காரைக்கால், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை எதிர்பார்க்கலாம். புயல் கரை கடக்கும் பகுதிகளில், 80-90km வரை மழையுடன் கூடிய காற்று வீச கூடும். 100km வரை வேகத்தில் அதிகபட்சமாக காற்று வீசக்கூடும். இன்று பிற்பகல் 8 மணிக்கு பின்னர் புயல் கரை கடக்க துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரை கடக்கும் சமயம்,
*கடலூர்* பகுதியில் சுமார் 55-65 km மழையுடன் கூடிய காற்று வீச கூடும். புயல் கடக்கும் பகுதிகளில், (நாகை, கோடியக்கரை, வேதாரண்யம்) மரங்கள் வேரோடு விழலாம். மின் கம்பங்கள் முறிந்து விழலாம். அப்பகுதியில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளலாம். கடலூர், புதுச்சேரி, சென்னை ஆகிய பகுதியில் மிதமான காற்றுடன் கூடிய மழை பெய்யலாம். இந்த மழை காற்று நாளை காலை வரை நீடிக்கலாம்.

⚓🛳 *Port Warning:*
இதன் காரணமாக கடலூர் ( பெரிய அபாயம் கொடி எண்: 9)சென்னை, என்னூர், காட்டுப்பள்ளி (உள்ளூர் எச்சரிக்கை கொடி எண்:3 ) நாகை, காரைக்கால் ( பெரிய அபாயம்- 10) பாம்பன், தூத்துக்குடி ( பெரிய அபாயம் 8) 15.11.2018 பிற்பகல் 2 மணி முதல் ஏற்றப்பட்டுள்ளது.

*Just Now Weather*
🌪காற்று:25 km
🌡வெப்பநிலை: 26.°
❄காற்றழுத்தம்: 1003mb
🌊கடல் அலை:2மீ
💦ஈரப்பதம்: 68%
📣 *கடலூர் வானிலை இன்று*: பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மிதமான காற்றுடன் (25km) மழை துவங்கலாம்.☔ இரவு 7 மணிக்கு மேல் சற்று காற்றுடன் கூடிய🌧 (40km) கன மழை இருக்கலாம். இரவு11 மணி முதல் 2 மணி வரை (65km) காற்று வீசலாம். நாளை 16th காலை 3 மணிக்கு மேல் சற்று மழை குறையும். பிற்பகல் வரை மிதமான மழை⛈ தொடரலாம். கடலூரில் கஜ புயல் காரணமாக நேரடியான பாதிப்பு இருக்காது.

J.Jebasingh, Cuddalore Port.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*