மாவட்டம்

Rate this post
கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் பஞ்சபூத ஸ்தலங்கள் ஸ்ரீ ஏகாம்பரநாதர் கோயில் காமாட்சி அம்மன் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது…
இத் திருத்தலங்களில் வருடந்தோறும் பிரம்மோற்சவ விழா பத்து நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த நிலையில் காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடம் சமஸ்தானம் நிர்வகிக்கும் உலகப் புகழ் பெற்ற ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் திருக்கோயிலின் ஸ்ரீ விளம்பி வருஷத்திய பிரம்மோற்சவ விழா இன்று காலை சென்னை ஓமத்துடன் துவங்கியது மாலை 7 மணி அளவில் விநாயகப்பெருமான் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்து பிரம்மோற்சவ விழாவின் துவக்கத்தில் முதல் நாள் நிகழ்வாக நேற்று நடைபெற்றது இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமான் மற்றும் காமாட்சி அம்மனை தரிசித்து அருள் பெற்றனர்.
இன்று காலை 6 மணி அளவில் பிரம்மோற்சவத்தின் கொடியேற்று விழா கோயில் கொடிமரம் அருகே பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது அதன்பின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிரம்மோற்சவ விழாவின் சிறப்பு அம்சமான வெள்ளி தேர் உற்சவம் வருகிற 18-ஆம் தேதியும் 21ம் தேதி காலை 5 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

Comment here