Uncategorizedஇந்தியாசினிமாதமிழகம்பொது

3டி தொழில்நுட்பத்தில் எந்திரன் 2.0

Rate this post

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகிவரும் எந்திரன் 2.0 திரைப்படம் டீசர் முப்பரிமாணத்தில் வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்துக்கு 2.0 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாகவும், அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் நேரடியாக தயாராகி வந்த, இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. நவம்பர் இறுதியில் படத்தை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில், 2.0 படத்தின் டீசர் 3-டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Comment here