விளையாட்டு

3வது ஒருநாள் போட்டி: 3 விக்கெட்டுகளை இழந்து நியூசி. திணறல் :தோனி இல்லை, பாண்டியாவுக்கு வாய்ப்பு

Rate this post

மவுண்ட் மவுங்கினி நகரில் நடந்துவரும்  3-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தொடக்கத்திலேயே நியூசிலாந்து அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்த போட்டியில் இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தோனிக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்கும், விஜய் சங்கருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவும் சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்தில் பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கெனவே 2 போட்டிகளில் வென்று 2-0 என்று இந்திய அணி முன்னிலை பெற்றுள்ள நிலையில், இன்றைய 3-வது போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதாகும். மவுண்ட் மவுங்கினி நகரில் பகலிரவாக நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியில் கிராண்ட்ஹோமேக்கு பதிலாக சான்ட்னர் சேர்க்கப்பட்டார்.

புவனேஷ்குமாரை பாராட்டும் வீரர்கள் : படம் உதவி ட்விட்டர்

இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. தோனிக்கு நேற்று பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டதையடுத்து, அவர் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த சில போட்டிகளாக வாய்ப்பு பெறாத கார்த்தி இந்த வாய்ப்பை இருகப் பற்றிக்கொள்வது அவசியமாகும். இந்த போட்டியில் தனக்குக் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்பியதால், விஜய் சங்கருக்கு பதிலாக பாண்டியா வாய்ப்புப் பெற்றார்.

கப்தில், முன்ரோ ஆட்டத்தைத் தொடங்கினார்கள். புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே முன்ரோ பேட்டில் எட்ஜ் எடுத்தது ஆனால், அதிர்ஷ்டவசமாக ஆட்டமிழக்கமில்லை. ஷமி 2-வது ஓவரை வீசினார். 3-வது பந்தில் முன்ரோ பவுண்டரி அடித்தார், 4-வது பந்தில் அருமையான கேட்ச் அதை தினேஷ் கார்த்திக் முயன்றும் பிடிக்க முடியவில்லை.  ஆனால், கடைசிப் பந்தில் ஆப் சைட் விலகிச் சென்ற பந்தை முன்ரோ பேட்டால் தொட அது ஸ்லிப்பில் நின்றிருந்த ரோஹித்திடம் சரணடைந்தது. முன்ரோ 7 ரன்னில் வெளியேறினார். 10 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து.

இலங்கைத் தொடரில் இருந்து முன்ரோ மிகமோசமாக பேட் செய்துவருவதால், நியூசிலாந்து அணியில் இருந்து விரைவில் கழற்றிவிடப்படுவார், அல்லது உலகக்கோப்பை அணியில் இடம் பெறாத நிலைக்கு தள்ளப்படுவார் எனத் தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா : கோப்புப்படம்

2-வது விக்கெட்டுக்கு கேப்டன் வில்லியம்ஸன், கப்திலுடன் இணைந்தார். நிதானமாக  வில்லியம்ஸன் பேட் செய்ய, புவனேஷ்குமாரின் 5-வது ஓவரில் ஒருபவுண்டரி, சிக்ஸர் விளாசினார் கப்தில்.  மீண்டும் 7-வது ஓவரை புவனேஷ்குமார் வீசனார். முதல் பந்திலேயே தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து  கப்தில் 13 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நியூசிலாந்து தொடக்க பேட்ஸ்மேன்கள் இருவரும் மிகவும் அற்பத்தனமாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். தொடக்கூடாத பந்துகளை தொட்டு எளிதாக விக்கெட்டுகளை இந்த முறையும் இழந்துள்ளனர்.

அடுத்துவந்த ரோஸ் டெய்லர், வில்லியம்ஸனுடன் சேர்ந்தார். இருவரும் பொறுமையாக ஆடி ரன்களைச் சேர்த்தனர். 12 ஓவரில் நியூசிலாந்து 50 ரன்களை எட்டியது. 17-வது ஓவரை சாஹல் வீசினார். மிட்விக்கெட் திசையில் வில்லியம்ஸன் தூக்கி அடிக்க அதை பாண்டியா அருமையாக கேட்ச் பிடித்தார். வில்லியம்ஸன்  28 ரன்களில் வெளியேறினார்.

களத்தில் ரோஸ் டெய்லர், லாதம் உள்ளனர்.  3 விக்கெட்டுகள் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது நியூசிலாந்து அணி.

Comment here