328 மருந்து பொருட்களுக்கு தடை : மருத்துவ தொழில்நுட்ப குழு அறிக்கை

Pills and capsules in medical vial
Rate this post

நாட்டில் 328 மருந்துப் பொருட்கள் பாதுகாப்பற்றவையாக இருப்பதால் அதனை தடை செய்யலாம் என மருத்துவ தொழில்நுட்ப குழு அறிவித்துள்ளது.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பல மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு அற்றவை என புகார் எழுந்தது. அதன்படி, மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு குறித்து அறிக்கை தயாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, மருத்துவ தொழில்நுட்ப குழு 328 மருந்துப் பொருட்கள் பாதுகாப்பு அற்றவை என அறிவித்துள்ளது. இதில், வலி நிவாரணை சாரிடான், சரும நோய் கிரீம் பாண்டெர்ம், சர்க்கரை நோய் காம்பினேஷன் மருந்து குளூகோனாம் பி.ஜி., ஆண்டிபயாடிக் லுபிடிகிளாக்ஸ், பாக்டீரியா எதிர்ப்பு டேக்சிங் ஏ.இசட். ஆகிய மருந்துகள் தடை செய்யப்பட உள்ளன. தடைசெய்யப்பட்ட மருந்துகள் பொருட்களின் மதிப்பு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பு கொண்டவை என உத்தேசிக்கப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*