உலகம்

6 மாதங்களுக்குள் லேப்டாப் உபயோகிக்க தெரியாத அமைச்சர்கள் பதவி நீக்கம் !

Rate this post

இன்னும் ஆறு மாதங்களுக்குள் லேப்டாப் உபயோகிக்க தெரியாவிட்டால் அமைச்சர்கள் பதவிநீக்கம் செய்யப்படுவார்கள் என நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளி தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நேபாள நாட்டின் பிரதமராக கே.பி. சர்மா ஒளி இரண்டாவது முறையாக பதவியேற்றுக் கொண்டார். இதையடுத்து பிரதமர் அலுவலகத்தை இன்னும் 6 மாதங்களுக்குள் காகிதம் இல்லாத இடமாக மாற்றப்போவதாக அதிரடியாக தெரிவித்தார்.

இந்நிலையில் கூட்டங்களில் செயல் திட்டங்கள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் கண்டிப்பாக லேப்டாப் உபயோகிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என தற்போது அறிவித்துள்ளார். இதையடுத்து, தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் அனைவரும் லேப்டாப்பை பயன்படுத்துவது எப்படி என தங்கள் உதவியாளர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் கே.பி. சர்மா ஒளி அறிவுறுத்தி இருக்கிறார்.

அமைச்சர்கள் ஆறு மாதங்களுக்குள் கற்றுக் கொள்ளா விட்டால் அவர்கள் பதவிநீக்கம் செய்து உத்தரவிடவும் தான் தயாராக உள்ளதகாவும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் நேபாள நாட்டின் பிரதமர் அலுவலகம் இன்னும் 6 மாதங்களில் காகிதம் இல்லா அலுவலகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comment here