6000  ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்க்கான ஆதாரங்கள்

5 (100%) 1 vote

 

மகோன்னதமானவர்கள்  காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்ததாக அறிகிறோம். முனிவர்கள், ரிஷிகள், சித்தர்கள்  தங்கள் தியானத்திற்கு ஏற்ற இடமாக வாழ்ந்தது குகைகளில் தான். தற்போதும் மனிதர்களோ, மிருகங்களோ செல்ல முடியாத இடங்களில் மகாபுருஷர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்தானே !  மிருகங்கள் குகைக்குள் வாழும், என அறிந்திருக்கிறோம். ஆதி மனிதர்கள் மழை, விலங்குகள்,  இருட்டு போன்றவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள  குகைகளில் வாழ்ந்திருகிறார்கள், அதற்க்கான சான்றுகள் குகைகளில் உள்ள ஓவியங்களிருந்தும்,அவர்கள் பயன்படுத்திய பொருட்களிலிருந்தும் அறிய முடிகிறது. இந்தியவில்  சுமார் 6000  ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் குகைகளில் வாழ்ந்ததற்க்கான ஆதாரங்கள் உள்ளன.  நூற்றுக்கணக்கான குகை வாழ் இடங்கள் இருந்தாலும் ஒரு சில இடங்களை மட்டுமே நம்மால் காண முடியும். சில குகைகள் காலத்தாலும் அமைப்பாலும் குறிப்பிடத்தக்கவை. இந்திய துணை கண்டத்திலே இரண்டாவது மிக பெரிய குகையும் சமதளத்தில் அமைந்துள்ளதுமான குகை ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள பெலும் குகை முக்கியமானது.

மிக நீளமான குகையும், நிலத்தடி நீரோட்டம் அமைந்துள்ள இந்த குகைகள் கருப்பு சுண்ணாம்பு கற்களால் ஆனது. குகையின் கூரைகளில் கூம்பு வடிவு காணப்படுகிறது. நிலத்தடி நீரோட்டத்தால் நிலத்திற்கடியில் அமைந்த இயற்கையான குகை. “ பிலும் “ என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து இக்குகையின் பெயர் அமைந்துள்ளது. தெலுங்கில் இக்குகை “ பெலும் குகாலு “ என அழைக்கபடுகிறது. இதன் நீளம் 3229  மீட்டர்கள் ஆகும். 1884 ல் ஆங்கிலயேர் ஆட்சி காலத்தில் நிலவியல் ஆய்வாளரான இராபர்ட் புருசு பூட்டால் அவர்களால் இந்த குகை கண்டறியப்பட்டது. 1982-1984  களில் ஜெர்மானிய குகை ஆராய்சியாளர் ஹச் டேனியல் கெபார் தலைமையில் அமைந்த குழுவால் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அதன் பிறகு 1988 ல் ஆந்திர பிரதேச அரசால் பாதுகாக்க பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. 2002 ல் ஆந்திர பிரதேச அரசு சுற்றுலா துறையால், சுற்றுலா தலமாக அறிவிக்கப்பட்டது. 3.5  கிலோமீட்டர் தூரம் ஆய்வு செய்யபட்டிருந்தாலும், 1.5  கிலோமீட்டர் தூரம் வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த குகையில் 150 அடி ஆழத்தில் நீர் வீழ்ச்சி ஒன்று உள்ளது.குகைக்குள் சில இடங்களில் சமதளமாகவும் , சில இடங்கள்  100  அடி வரை இறங்க சிறிய வழி உள்ளது இந்த குகைக்குள் மின்சார வசதியும், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டும் உள்ளது.

இந்த குகைக்கு தனியாக செல்ல அனுமதியில்லை. சுற்றுலா பயணிகள் குறைந்தது 15- முதல் 20  பேர் வரை வழிகட்டிகளுடன் செல்லவது சிறந்தது. இந்த குகையில் புத்த,ஜைன மத துறவிகள் தவம் செய்ததற்கான பொருட்கள் கிடைத்ததாக தெரிகிறது. இந்த குகை காண்போரின் கண்களை கவரும் விதமாக அற்புதமாக உள்ளதாக சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்..

பெலிகுண்டவிலிருந்து        4    கிலோமீட்டர்

பெல்லரியிளிருந்து           144         கிலோமீட்டர்.

கர்நூலில்ருந்து               106        கிலோமீட்டர்.

திருபதியில்ருந்து             261        கிலோமீட்டர்.

ஹைதராபாத்திலிருந்து      319         கிலோமீட்டர்.

பெங்களுரிலிருந்து            324         கிலோமீட்டர்.

சென்னையிலிருந்து           392         கிலோமீட்டர்.

தொலைவிலும் அமைந்துள்ளது இங்கு சுற்றுலா செல்வதற்க்கு சுற்றுலா துறைமூலம் செல்வது சிறந்தது.

 

 

 

 

பெல்லாரியில் இருந்து              144

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*