63 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வரும் மா. சுப்பிரமணியனுக்கு விருது!

5 (100%) 1 vote

சென்னை முன்னாள் மேயரும், சைதாப்பேட்டை திமுக எம்எல்ஏவுமான மா. சுப்பிரமணியன், மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். சமூகப் பிரச்னைகளை முன்வைத்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் நடந்த 63 மாரத்தான் போட்டிகளில் இதுவரை பங்கேற்றுள்ளார்.

இப்படி தொடர்ந்து பல இடங்களில் நடந்த 21.1 கி.மீ தூர மாரத்தானில் கலந்துகொண்டு சாதனை படைத்துவரும் அவருக்கு வேர்ல்டு ரெக்கார்டு யூனியன் சார்பில் இன்டர்நேஷனல் கோல்டன் டிஸ்க் விருது டில்லியில் சனிக்கிழமையன்று வழங்கப்பட்டது.

இதற்கான விழாவில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட என் வாழ்க்கை 20 ஆண்டுகளுக்கு மேலாக நடைபயிற்சி, உணவுப் பழக்கம், மாத்திரைகள் என நகர்ந்தது. 2013-ல் ஓடத் தொடங்கி, 2014-ல் 21.1. கி.மீ. மாரத்தானில் ஓடினேன். இதில் கிடைத்த நம்பிக்கையால் மாரத்தானில் தொடர்ந்து சாதனை புரிய முடிந்தது. கடந்த 3 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட மாரத்தான் போட்டிகளில் ஓடியுள்ளேன். அடுத்த 2 ஆண்டுகளில் ஆஸ்திரேலியா, கத்தார், இத்தாலி, நார்வே மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளில் அடுத்த 21.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட 50 மாரத்தானில் ஓடவுள்ளேன்” என்று முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*