உலகம்

65.3 மில்லியன் மக்கள் அகதிகளாகினர்: ஐ.நா. தகவல்

2015ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் அகதிகளாகினர்: ஐ.நா. தகவல்

 

2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா. அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறிந்த்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: –

2015-ம் ஆண்டில் மட்டும் உலகளவில் 65.3 மில்லியன் மக்கள் தங்கள் சொந்த இடங்களை விட்டு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இது 2014-ம் ஆண்டை விட 5.8 மில்லியன் அதிகமாகும். மக்களின் இடம்பெயர்வுக்கு வன்முறை, உள்நாட்டு போர் மற்றும் வறுமை முக்கிய காரணமாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம்புக விண்ணப்பிக்கும் மக்களின் எண்ணிக்கை. ஒரு மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.  உலகின் மொத்த மக்கள் தொகை 7.349 பில்லியன் ஆகும். இதன்படி ஒவ்வொரு 113 பேரில் ஒருவர் உள்நாட்டிலோ அல்லது வெளிநாடுகளுக்கோ அகதியாக இடம்பெயர்கிறார்.

அதிகபட்சமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த 5 மில்லியன் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் சிரியா (4.9 மில்லியன்), ஆப்கானிஸ்தான்(2.7 மில்லியன்), சோமாலியா(1.1 மில்லியன்) ஆகிய நாடுகள் உள்ளன. 2015 ல் முதல் முறையாக  ஐரோப்பிய ஒன்றியத்தில் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையில் சிரியாவை சேர்ந்தோர்களும் அதிகமாக இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து ஐ.நா. அமைப்பின் தலைவர் பிலிப்போ கிராந்தி கூறுகையில், “உலக நாடுகள் அகதிகள் பிரச்சனையில் மட்டும் அல்லாமல், ஒட்டுமொத்த மனித இனத்தின் நன்மையை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்பதுதான் இன்று நம் முன் உள்ள மிகப் பெரிய சவால்” என்று தெரிவித்துள்ளார்.

Comment here