7 பேர் விடுதலையை தடுக்கிறார் ஆளுநர் ?

Rate this post

ராஜீவ் கொலை வழக்கில் சிக்கிய 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு முழு அதிகாரம் இருந்தும் அரசியல் வீணாக தாமதப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இதனால், தமிழக அரசு 7 பேரை விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. அதனுடன், தமிழக அரசு,ஆளுநர் 7 பேர் விடுதலையை எடுக்கும் அதிகாரம் உள்ளது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் அறிவித்தது. இதன்படி, தமிழக அமைச்சரவை பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர்களையும் விடுதலை செய்ய ஆளுனருக்கு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையின் அடிப்படையில் தமிழக ஆளுனர் பன்சாரிலால் புரோஹித் விரைவில் முடிவை எடுப்பார் என பலர் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுப்பி வைத்துள்ளார். இதனால், 7 பேர் விடுதலையில் சிக்கல் நீடிக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், 7 பேர் விடுதலை குறித்து உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் இருந்தும், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு 7 பேர் விடுதலை செய்வது குறித்து அறிக்கை அரசியல் காரணங்களுக்காக தாமதப்படுத்தப்படுகிறதோ என பலருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*