7-வது ஊதியக் குழு பரிந்துரைகள் அக்.1 முதல் அமல்படுத்தப்படும்: முதல்வர் அறிவிப்பு

5 (100%) 2 votes

தமிழக அரசு ஊழியர்கள் ஊதியம் 2.57 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை ஊதியம் 14 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இனி தமிழக அரசு ஊழியர்களின் குறைந்த பட்ச ஊதியம் 15,700 ஆக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவது குறித்து இறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசு ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  இன்று மாலை முதலமைச்சர் பழனிசாமி வெளிட்டார்.

அதன்படி தமிழக அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் ரூ.6,100இல் இருந்து 15,700 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச ஊதியம் ரூ.77,000இல் இருந்து 2.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு ஜனவரி 2016 முன்தேதியிட்டும் 1.10.2017  பண பயனுடன்அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது வழங்கப்படும் பணிக்கொடைக்கான வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.7850 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் குறைந்தபட்ச பென்சன் ரூ.7,850 ஆகவும், அதிகபட்ச பென்சன் ரூ.1,12,500 மற்றும் குடும்ப பென்சன் 67,500ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறப்பு காலமுறை ஊதியம்

சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள, கிராம பஞ்சாயத்து செயலர் உள்ளிட்டோருக்கான  சிறப்பு காலமுறை ஊதியமும் உயர்த்தப்படுகிறது. அதன்படி சிறப்பு காலமுறை ஊதியம் குறைந்த பட்ச சம்பளம் ரூ. 3 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.11 ஆயிரமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியம் ஆகியவை 30% உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த ஊதியம் மற்றும் ஓய்வூதிய உயர்வால் ஒட்டுமொத்தமாக அரசுக்கு ரூ.14,719 கோடி கூடுதல் செலவு ஏற்படும். மேலும் ஊதிய உயர்வால் 12 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 7 லட்சம் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*