இந்தியா

8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை

உலக அமைதிக்காகவும் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் இயற்கை வளத்தை அதிகப்படுத்தவும் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 8,000 கிலோ மீட்டர் நாலு லட்சம் இதை பந்துகள் தூவி சாதனை படைத்த கரூர் பள்ளி மாணவி ரக்ஷனாவின் சாதனை நிறைவு விழா கரூரில் நடந்தது.

கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவி ரக்ஷனா இவர் உலக அமைதிக்காகவும் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் பல்வேறு வகையில் இலவச மருந்துகள் கொடுத்தும் குறைந்த நீரில் விவசாயம் செய்வதைப் அறிமுகப்படுத்தியும் இதைப் புரிந்து கொள்வதற்கு 24 மணி நேரம் விழிப்புணர்வு தியானம் செய்தும் 10 மொழிகளில் மரம் வளர்ப்பு பற்றி பேசி சாதனை படைத்த இந்த மாணவி ரக்ஷனா தற்போது இந்தியா முழுவதும் 8,000 கிலோ மீட்டர் 30 நாட்கள் பயணம் செய்து தனது பயணத்தின் நோக்கத்தை நிறைவு செய்துள்ளார் கரூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது தனியார் பள்ளி முதல்வர் சாம்சன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ரக்ஷனாவின் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் வாழ்த்தி பாராட்டினர் பூமி வெப்பமயமாதலை தடுக்கவும் இயற்கை வளத்தை அதிகப்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 8,000 கிலோ மீட்டர் சென்று கிலோமீட்டர் ஒன்றுக்கு 50 விதைகள் வீதம் நான்கு லட்சம் விதைகளை தூவி சாதனை படைத்துள்ளார் குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்தால் பெண் கல்வியை ஊக்குவித்து பாலியல் வன்கொடுமை தடுத்தல் விதைப்பந்து தூவுதல் பறவை இனம் காத்தல் இயற்கை விவசாயம் மேம்படுத்துதல் போன்ற ஆறு வகையான விழிப்புணர்வு பிரச்சாரத்தை தனது முப்பது நாள் பயணத்தில் இவர் செய்துள்ளார் இந்த சிறு வயதில் இவர் செய்த சாதனையை ஆசிரியர்களும் பொதுமக்களும் பெற்றோர்களும் சக மாணவ மாணவியர்களும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பேட்டி:பள்ளி மாணவி ரஷ்ணா.

Comment here