மாவட்டம்

9 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறித்து ஆலோசனைக் கூட்டம்

Rate this post

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை (ஊரக பகுதியில் 1200  நகரப் பகுதியில் 1400) கருத்தில் கொண்டு வாக்குச் சாவடிகளை பிரித்தல் வாக்குச் சாவடிகளின் மையங்கள் வாக்காளர்கள் குடியிருப்பு பகுதியில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு மேல் உள்ளவை  பழுதடைந்த கட்டடங்களில் உள்ள வாக்குச் சாவடி மையங்களை மாற்று கட்டடங்களை மாற்றம் செய்தல் மற்றும் இதர காரணங்களுக்காக வாக்குச் சாவடி மையங்களை பகுப்பதற்கு தொடர்பான பணிகள் கடந்த 21.06.2018 முதல் 01.07.2018 வரை நடைபெற்றது.

இதன் இறுதி கட்டமாக 02.07.2018 அன்று வாக்குச் சாவடிகளின் பட்டியல் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துகள் பெற 09.07.2018 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. 10.07.2018 அன்று கோட்ட அளவில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் தலைமையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கைகள்  கருத்துக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் முன்மொழிவாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெறப்பட்டது. மேற்படி முன்மொழிவுகளின் அடிப்படையில் இன்று மாவட்ட தேர்தல் அலுவலர்  மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் நடத்தப்பட்ட கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகளால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விவரம் பின்வருமாறு:

சட்ட மன்ற தொகுதி ஏற்கனவே உள்ள வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை புதிதாக உருவாக்கப்படும் வாக்குச் சாவடிகள் மொத்த வாக்குச் சாவடிகள் எண்ணிக்கை

151 திட்டக்குடி(தனி) 241 6 247

152 விருத்தாசலம் 272 10 282
153 நெய்வேலி 226 5 231

154 பண்ருட்டி 251 6 257

155 கடலூர் 228 -1 227

156 குறிஞ்சிப்பாடி 251 4 255

157 புவனகிரி 288 3 291

158 சிதம்பரம் 253 7 260

159 காட்டுமன்னார் கோயில் (தனி) 246 4 250
மொத்தம் 2256
44
2300

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையங்களை பகுப்பது  தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.ப.தண்டபாணி  தலைமையில் நடைபெற்றது. அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.விஜயா கடலூர் சார் ஆட்சியர் சரயு மற்றும் பலர் உள்ளனர்.

Comment here