இந்தியா

9 மணிக்கு அலுவலகம் வரவில்லையென்றால் சம்பளம் ‘கட்’ யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு

உ.பி.யில் அரசு அதிகாரிகள் காலை 9 மணிக்கு சரியாக அலுவலகம் வரவேண்டும் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். சரியாக வரவில்லை என்றால் சம்பளம் ‘கட்’ செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் காலை 9 மணியிலிருந்து 11 மணி வரையில் மக்களை சந்திக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை எப்போது நாங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்பதையும் அரசு அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. போலீஸ் அதிகாரி ஒருவர் பேசுகையில், “நேற்று இரவு சாலை விபத்து காரணமாக அதிகாலை 4 மணிக்குதான் வீட்டுக்கு சென்றேன். அப்படியிருக்கையில் காலை 9 மணிக்கு எப்படி அலுவலகம் செல்ல முடியும்? நாங்கள் இப்போது ஒருநாள் முழுவதும் வேலை பார்ப்பது போல்தான் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

Comment here