சினிமா

91-வது ஆஸ்கர் விருதுகள் : சிறந்த வெளிநாட்டு திரைப்படம் உட்பட ரோமா படத்துக்கு 2 விருதுகள்

Rate this post
லாஸ் ஏஞ்சல்ஸ், ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.
91-வது ஆஸ்கர் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதாக இருந்த நடிகர் கெவின் ஹார்ட் விலகியதை அடுத்து, வேறு யாரும் தொகுத்து வழங்கவில்லை. இதனால் தொகுப்பாளர் இல்லாமலேயே இந்த விழா நடக்கிறது. 91-வது ஆஸ்கர் விருதுக்கு, தி ஃபேவரைட் மற்றும் ரோமா படங்கள் அதிக பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தலா 10 பிரிவுகளில் இரண்டு படங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
2019- ஆம் ஆண்டு ஆஸ்கர் விருதுகள் விவரம்:
*சிறந்த துணை நடிகை- ரெஜினா கிங்  (IfBealeStreetCouldTalk  படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக வழங்கப்பட்டுள்ளது.
*சிறந்த ஆவணப்படம்-  ஃப்ரீ சோலோ.
*சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரம்: வைஸ் (vice).
*சிறந்த ஆடை வடிவமைப்பு : பிளாக் பேந்தர்
*சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு :  ரூத் கார்டர் (பிளாக்பேந்தர் படத்துக்காக பெற்றார்)
*சிறந்த ஒளிப்பதிவு: ரோமோ படத்துக்காக அல்போன்சா குரோன்
* சிறந்த வெளிநாட்டு திரைப்படம்: ரோமோ (மெக்சிகோ நாட்டு திரைப்படம்)
* சிறந்த ஒலிப்பதிவு தொகுப்பு: போகிமியான் ராப்சோடி

Comment here