‘பூமராங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது..!

Rate this post

படத்தின் செலவை அதிகரித்து ஆடம்பரமாக மாற்றாமல், தயாரிப்பாளரை  பாதுகாப்பு வளையத்தில் வைத்திருப்பது இயக்குநர் கண்ணனின் தனித்திறமை.

தன்னுடைய கேரியரில் இதைத் தொடர்ந்து நிரூபித்து எடுத்துக்காட்டாக இருப்பவர். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா நடிக்க, தானே தயாரித்திருக்கும் ‘பூமராங்’ படத்திலும் இதைத்தான் செய்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

இது பற்றிப் பேசிய இயக்குநர் கண்ணன், “பூமராங்’ படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தவுடனேயே, படத்தை முடிக்க 90 நாட்கள் தேவைப்படும் என்று தெளிவாக தெரிந்தது. மேலும் மிக அதிகமான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டோம். 4 வெர்சன் திரைக்கதை இருந்தது,

ஒரு நாளைக்கு 2 காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருந்தோம். அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா ஆகியோரின் ஒத்துழைப்பு இருந்தால் திட்டமிட்டதைவிடவும் பாதி நாட்களில் ஆதாவது 45 நாட்களிலேயே படப்பிடிப்பை முடித்துவிட்டோம்..

இந்த முழு படமும் அதர்வாவை சார்ந்தது. அவரிடம் இருந்து 3 வித்தியாசமான தோற்றங்கள் இந்த படத்துக்கு தேவைப்பட்டது. புரோஸ்தடிக் மேக்கப் செயல்முறையின்போது மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். மிகச் சிறந்த புரோஸ்தடிக் ஒப்பனை கலைஞர்களான ப்ரீத்தி ஷீல் சிங் மற்றும் மார்க் ட்ராய் டிஸோசா 12 மணி நேர உழைப்பிற்கு பிறகு அதர்வாவுக்கு சிறந்த, சரியான தோற்றத்தை கொண்டு வந்தனர்…” என்றார்.

ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் சென்னை, அருப்புக்கோட்டை, விருதுநகர் மற்றும் அந்தமான் தீவில் ஒரு சில பகுதிகளில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இயக்குநர் கண்ணன் தன் வழக்கப்படி, தனக்கு நெருக்கமான ஒரு தமிழ் தலைப்பை வைக்கத்தான் திட்டமிட்டிருந்தார். பின் ‘பூமராங்’ என்ற தலைப்பு படத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்து இந்த தலைப்பை வைத்திருக்கிறார். பாலிவுட் நடிகர் உபென் படேல் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும், அதர்வாவுக்கும் இடையில் நடக்கும் மோதல் காட்சிகள் மிக சிறப்பாக இருக்குமாம். 

போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் 60 நாட்கள் கால அளவில் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது, ஆகஸ்ட் மாதம் இத்திரைப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள். 

ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ், சுஹாசினி மணிரத்னம் மற்றும் பல முக்கியமான நடிகர்கள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். மசாலா பிக்ஸ் நிறுவனத்தின் சார்பில் இத்திரைப்படத்தை தானே தயாரித்திருக்கிறார் இயக்குநர் கண்ணன்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*