சினிமா

கோலி சோடா 2 படத்தை புரொமோஷன் செய்ய ’ஜிஎஸ்டிவண்டி’!

ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கிய கோலி சோடா படம் பெரிய வெற்றி பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் கோலி சோடா 2 என்ற பெயரில் உருவாகி உள்ளது. ரப்நோட் புரொடக்ஷ்ன் சார்பில் விஜய் மில்டனே தயாரிக்கிறார். சமுத்திரகனி, சுபிக்ஷா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இயக்குநர் கவுதம் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். முந்தைய பாகத்திற்கும், இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. முற்றிலும் வித்தியாசமான கதையில் உருவாகி உள்ளது.இப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கோலி சோடா 2 படத்தை வித்தியாசமான முயற்சியில் புரொமோஷன் செய்ய உள்ளனர். இதற்காக ஜிஎஸ்டி வண்டி ஒன்று ஊர், ஊராக சுற்ற உள்ளது.

இதுகுறித்து விஜய் மில்டன் கூறியிருப்பதாவது… இன்றைய காலக்கட்டத்தில் ஒரு பட வெளியீட்டிற்கு ஆகும் விளம்பர செலவு என்பது சராசரியாக கோடிகளில் கணக்கிடப்படுகிறது. இது வழக்கம்போல அனைத்து பட ரிலீஸுக்கும் இருக்கும் நடைமுறை. நாங்கள் அதிலிருந்து சிறிது விலகி படத்தின் விளம்பர செலவின் ஒரு பகுதியை ஆக்கபூர்வமாகவும் மக்களுக்கு உபயோகமாகவும் செலவழிக்கும் மாற்று சிறுமுயற்சியே இந்த ஜிஎஸ்டி வண்டி.இந்த வண்டியில் ஒவ்வொரு ஊரின் மக்களின் தேவைக்கு ஏற்றபடி உதவ உள்ளோம். இந்த வண்டியில் உணவு, மோர், இளநீர் போன்றவை இருக்கும்.

ஆங்காங்கே பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும். இதுபொதுநலம் என்றாலும் அதில் சிறிது சுயநலமும் உள்ளது. விளம்பரங்களில் கோடிகளை கொட்டுவதை விட இதுபோன்ற விஷயங்களை செய்யலாம் என தோன்றியது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Comment here