அழகு குறிப்புகள்

முகத்தின் அழகைக் கெடுக்கும் காரணிகளுக்கு சில டிப்ஸ்!!

உங்கள் முகத்தில் வளரும் முடி, உங்கள் அழகைக் கெடுப்பதாக நினைக்கிறீர்களா அல்லது அதை நினைத்து வெட்கப்படுகிறீர்களா? வீட்டிலேயே அவற்றை அகற்றுவதற்குப் பின்வரும் வழிமுறையை நீங்கள் பின்பற்றி மகிழலாம்.

த்ரெட்டிங்

புருவ முடிகளிலும் மேல் உதடுகளிலும் முகத்தின் மற்ற பகுதிகளிலும் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு பிரபலமாக இருக்கும் ஒரு வழிமுறை த்ரெட்டிங். நீங்களாகவே ஒரு நூலை எடுத்து வேரிலிருந்து முடிகளை அகற்றிக் கொள்ளலாம் அல்லது சலூனுக்கு சென்று ப்யூட்டிஷியனிடம் சொல்லி அகற்றிக் கொள்ளலாம்.
சில பெண்களுக்கு த்ரெட்டிங் வலி நிறைந்ததாக இருக்கும் என்று பயம் இருக்கலாம், அவர்கள் முன்னதாக மரத்து போவதற்கான கிரீமைப் பூசலாம் அல்லது முடியை எடுத்த பிறகு, சூடான ஒத்தடம் தரலாம். த்ரெட்டிங்கால் எந்தவொரு மாறுபட்ட முடிவளர்ச்சி அல்லது சரும எதிர்வினைகள் போன்றவை ஏற்படாது ஏனெனில் இதில் எந்தவொரு வேதிப்பொருட்களும் பயன்படுத்தப் படுவதில்லை. உங்களுக்கு தீவிரமான முகப்பருக்கள் இருந்தால், சருமத்தில் உள்ள பருக்களை த்ரெட்டிங் உடைக்கக் கூடும்.

ட்வீசிங்

த்ரெட்டிங்கைப் போலவே, ட்வீசிங், முடிகளை வேரில் இருந்து அகற்றுகிறது, ஆனால் இதில் நூலுக்குப் பதிலாக ஒரு ட்வீசர் பயன்படுத்தி, முடி ஒவ்வொன்றாகப் பிடுங்கப்படும். மீண்டும், முடி வேரில் இருந்து எடுக்கப்படுவதால், இதன் பலன் நீண்டகாலத்திற்கு கிடைக்கும். – சுமார் மூன்று முதல் எட்டு வாரங்கள் வரை அப்படியே இருக்கும்.ஒரு நல்ல ட்வீசரை வாங்கி, புருவம் மற்றும் மேல் உதடுகள், தாடை பகுதியில் உள்ள தேவையற்ற முடிகளை எளிதாக அகற்றலாம். இதமான சூட்டுடன் உள்ள துணியால் முதலில் உங்கள் முகத்தைத் துடைப்பதில் தொடங்குங்கள், இதனால் சருமம் மென்மையடையும். பிஷீறீபீ sளீவீஸீ tணீut ணீஸீபீ முடி வளர்ந்திருக்கும் திசையில் ஒவ்வொரு முடியாக பிடுங்கிக் கொண்டே செல்லவும். சிவந்து போவதைத் தவிர்க்க, அந்தப் பகுதியின் மேல் குளிர்ச்சியான கம்ப்ரெஸ்ஸை வைக்கவும்..
ட்வீசிங் முடி அகற்றுதல்

எபிலேஷன்

எபிலேஷன் என்பது முடிகளை வேரிலிருந்து அகற்றும் இன்னும் ஒரு முறையாகும், இதன் மூலம், நீடித்திருக்கும் முடிவுகள் நமக்கு கிடைக்கும். எபிலேட்டர்கள் பல்வேறு அளவுகளிலும் வருகின்றன. உடலின் மற்ற பாகங்களில் இருந்தும் முடிகளை அகற்ற இதைப் பயன்படுத்தலாம், எனவே கிடைக்கும் எல்லா டிசைன்களையும் கொஞ்சம் ஆய்வு செய்து உங்களுக்குத் தேவையானதை வாங்கவும்.
உள்நோக்கி முடி வளர்வ்தைத் தடுக்க, முன்னதாக சிறிதளவு எக்ஸ்ஃபோலியேட் செய்யவும். உங்கள் சருமத்தை திடமாக வைத்து, எபிலேட்டரை சருமத்திற்கு 90 டிகிரியில் பிடித்து, முடி வளர்ச்சியின் எதிர்திசையில் நகர்த்த வேண்டும்.

வாக்ஸிங்

வாக்ஸிங் பரவலான இடத்தில் உள்ள முடியை அகற்ற உதவுகிறது. இதனால் சிறிதளவு அசவுகரியம் ஏற்படலாம். ஆனால் அது அதிக வலி நிறைந்ததாக இருக்காது. வீட்டிலேயே நீங்கள் வாக்ஸிங் செய்யலாம் அல்லது சலூனில் நிபுணர் மூலமாக செய்து கொள்ளலாம். உங்களுக்கு சென்சிடிவ் சருமம் இருந்தால்,முதலில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து கொள்ளுங்கள்.வீட்டில் வாக்ஸிங் செய்கிறீர்கள் என்றால், சருமத்தின் மேல் பூசுவதற்கு முன்பு மெழுகை உருக்க வேண்டும், அதன் பிறகு ஒரு பேப்பர் அல்லது துணி துண்டுகள் மூலம் அதை இழுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். முகத்திற்கு சரியான மென்மையான வாக்ஸைப் பயன்படுத்துவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.மெழுகை முடி வளர்ந்திருக்கும் திசையில் பூசி, அதன் எதிர் திசையில் பிடித்து இழுக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். சருமத்தை அலசி, கோல்ட் கம்ப்ரெஸ் பூசவும், அதன் பிறகு லேசான மாய்ஸ்ட்ரைசரைப் பூசலாம்.

ஷேவிங்

உங்கள் முகத்தில் இருந்து தேவையற்ற முடியை அகற்ற, இது எல்லா வகையிலும் மிகவும் எளிதான மற்றும் வேகமான வழிமுறையாகும். ஆனால், உடலின் எல்லா பகுதியிலும் ஷேவிங் செய்ய தயங்காத பெண்களுக்கும், முகத்தில் ஷேவிங் செய்ய தயங்குகிறார்கள். ஷேவிங் செய்தால் முடி அடர்த்தியாக மீண்டும் வளரும் என்கிற தவறான எண்ணம் இருக்கிறது, அது உண்மையல்ல. ஆனால் ஷேவிங் செய்து முடித்த அடுத்த இரண்டு நாட்களில் முடி வளரும்போது, தடிமனாக இருப்பதாக உணர்வீர்கள்.வாக்ஸிங்கும், த்ரெட்டிங்கும் வலி நிறைந்தது என்று நீங்கள் நினைத்தால், ஷேவிங் அதற்கு ஒரு நல்ல மாற்று வழியாக இருக்கும். முகத்திற்கு ஒரு பிரத்யேகமான ரேசரைப் பயன்படுத்துங்கள், இதனால் முகத்தில் அழுக்கோ வேறு கிருமிகளோ தொற்றாது. எப்போதுமே முடி வளர்ச்சியின் பாதையில் ஷேவிங் செய்யுங்கள், மெதுவாக செய்திடுங்கள், அப்போதுதான் உங்களுக்கு காயம் எதுவும் ஏற்படாது.இதனால் ஏற்படக்கூடிய பொதுவான பக்க விளைவு உள்நோக்கி வளரும் முடியாகும். இதைத் தவிர்க்க, ஷேவிங் செய்வதற்கு முன்பாக, முகத்திற்கான தயாரிப்புகளைப் பயன்படுத்தி, எக்ஸ்ஃபோலியேட் செய்திடுங்கள்.

டெபிலேட்டரி கிரீம்

டெபிலேட்டரி கிரீம்களில் சோடியம், டைடானியம் டை ஆக்ஸைடு, பேரியம் சல்ஃபைடு போன்ற கிரீம்கள் இருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள், தலைமுடியில் உள்ள புரதங்களை உடைத்து, இதனால் தலைமுடி சிதைவுற்று உடையத் தொடங்குகிறது. இதனால் முடி வேரில் இருந்து அகற்றப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், இது ஏறத்தாழ ஷேவிங்கைப் போன்றதே. டெபிலேட்டரி கிரீம் முடி அகற்றுதல்
டெபிலேட்டரி கிரீமில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் பொதுவாக பாதுகாப்பானவை அதில், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடையாது. சென்சிட்டிவ் சருமம் இருந்தால், ஒரு பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து விடுங்கள். 24 மணிநேரங்களுக்குப் பிறகு சோதனை செய்த இடத்தில் ஏதேனும் சிவந்துபோதல், எரிச்சல், அரிப்பு அல்லது வீக்கம் இருக்கிறதா என்று பாருங்கள். எல்லாம் சரியாக இருந்தால், பேக்கேஜிங்கில் உள்ள வழிமுறைகளின்படி கிரீமைப் பயன் படுத்துங்கள். பொதுவாக டெபிலேட்டரி கிரீம்கள், ஜெல்கள் அல்லது லோஷன்களை சருமத்தின் மேல் முழுமையாகப் பூசி விட்டு,-15 நிமிடங்கள் காத்திருந்து பிறகு அகற்றி விடலாம். முகத்திற்கான பிரத்யேக தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை
உறுதி செய்து கொள்ளுங்கள்.

Comment here