சினிமா

கலைப்புலி தாணு தயாரிக்கும் புதுப் பட தலைப்பு -‘ 60 வயது மாநிறம்’

Rate this post

கலைப்புலி தாணு தயாரிப்பில் விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படத்துக்கு ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

‘மொழி’, ‘பயணம்’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் தற்போது விக்ரம் பிரபு, சமுத்திரக்கனி, பிரகாஷ் ராஜ் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு, ‘60 வயது மாநிறம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்துஜா, குமரவேல், ஷரத், மதுமிதா, மோகன்ராம், அருள்ஜோதி, பரத் ரெட்டி ஆகியோர் முக்கிய வேடங் களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.

விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்ய, விஜி வசனம் எழுதியுள்ளார். பா.விஜய், பழநிபாரதி, விவேக் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளனர். ஆகஸ்ட் மாதம் படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் ‘காற்றின் மொழி’ என்ற படத்தை இயக்கியுள்ளார் ராதாமோகன். இந்தப் படம் அக்டோபர் மாதம் 18-ம் தேதி வெளியாக இருக்கிறது.

Comment here