சினிமா

சுந்தர் சி யுடனான காதலைப் பகிர்ந்து கொள்ளும் பிரபல நடிகை!!

நடிகை குஷ்பு சுந்தர் சமீபத்தில் தனது சமூக வலைப்பின்னல் பக்கத்தில் தனது கணவர், நடிகர்-இயக்குனர் சுந்தர் சி தன்னிடம் காதலை ஒப்புக்கொண்டு, 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருந்தார்,

“இது இந்த நாளில், 25 வருடங்களுக்கு முன்பு, நீங்கள் என்னிடம் காதலை சொன்னீர்கள்..நமது குழந்தைகள் எப்படி இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வப்பட்டோம்..இப்போது, 25 வருடங்களுக்குப் பிறகும் எதுவும் மாறவில்லை..நான் உன்னை அப்படியே தான் நேசிக்கிறேன் ..

நீங்கள் என் கண்களைப் பார்க்கும்போது நான் இன்னும் வெட்கப்படுகிறேன்..நீங்கள் என்னைப் பார்த்து புன்னகைக்கும்போது நான் இன்னும் முழங்காலில் பலவீணமாகிப் போகிறேன். சுந்தர், நீ தான் என் வாழ்க்கையில் எனக்கு நிகழ்ந்த மிகச் சிறந்த விஷயம். என்னை திருமணம் செய்யச் சொன்னதற்கு நன்றி  .. லவ் யூ டா. ”

குஷ்பு 2000 ஆம் ஆண்டில் சுந்தரை மணந்தார். இருவருக்கும் ஆனந்திதா மற்றும் அவந்திகா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சுந்தர் சி தற்போது அரண்மனை 3 படத்தில் பணிபுரியும் வேளையில், குஸ்பு தலைவர் 168 இல் நடிக்கிறார்.

Comment here