Sliderவரலாறு

power of attorney – முதுகண்

Rate this post

மொழியின் பெருமை ,மற்றும் வரலாறு ஆகியவை அதில் இடம் பெற்றிருக்கும் சொற்களில் இருந்தும், , சொற்களின் வரலாற்றை அவற்றின் வேர்களில் இருந்தும் அறியலாம் இவைகளில் இருந்து அந்த மொழி பேசும் மக்களின் வரலாறு கலை பண்பாடு வாழ்க்கை முறை சடங்கு மரபு இவை அனைத்தையும் அனுமானிக்க இயலும் .எனவே பண்டைய பத்திரப்பதிவில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் நமக்கு நிறைய செய்திகளைத் தருகிறது .,

இன்றைய power of attorney போன்றே பதிவு செய்யும் ஒருவர் மற்றவருக்கு
அதிகாரம் அளிக்கும் முறையும் பண்டையக்காலத்தில் முதுகண் என்று அழைத்திருக்கின்றனர் .ஒருவருக்கு மற்றொருவர் பிரதிநிதியாக இருந்து
ஆவணங்களை முதுகண் என்று அழைக்கப்பட்டிருக்கிறது .இத்தகைய ஆவணங்களில் ” முதுகண்ணாக உடைய ” என்று எழுதி அதற்க்கு கீழே ஒப்பமிட்டிருக்கின்றனர் .வயதுக்கு வராத குழந்தைக்கு தாயும் ,வயது முதிர்ந்த தாயிற்கு அவரின் மகன் முதுகண் ஆக இருந்திருக்கின்றனர் .

இப்போது பிணை என்று அழைக்கப்படும் ஷூரிட்டி அளிப்பது என்ற முறை அப்போதும் இருந்திருக்கின்றது .அப்போது அந்த பிணை என்பது புணை என்று ழைக்கப்பட்டிருக்கிறது .புணை ப்பட்டவர்கள் புனைக்கொடுத்தவர்கள் சேயும்
தவறுகளுக்குப்பொறுப்பாவார்கள் .
“சேந்தனை ப் பிணையாகக் கொடுத்து ” ” புணைப்பட்ட துருத்து சேந்தனும் “
என்று கல்வெட்டில் வருகிறது (116/19)
வேறு ஒரு முறை புணை க்கொடுக்கப்பட்டவர் அபராதத தண்டம் கட்ட நேர்ந்தபோது ,அவரால் கட்ட முடியாத நிலை ஏற்பட்டதால் புணைப்பட்டவரின்
நிலத்தை விற்று அந்த தொகை பெறப்பட்டது என்று வேறு ஒரு சோழர் கல்வெட்டு கூறுகிறது ( 260/19)

திரிவிட்டுக்கொடுத்தல்
ஒருவர் பெயரில் உள்ள ஆவணத்தை யோ , ,அந்த ஆவணத்தின் செயல்பாடுகளையோ மற்றொருவர் பெயரில் மாற்றிக்கொடுக்க முடிந்திருக்கிறது .அந்த முறை திரிவிட்டுக்கொடுத்தல் என்று அழைப்பிக்கப்பட்டிருக்கிறது .

கொடையாக ஆலயத்திற்குக்கிடைத்த ஆடு நிலம் இவற்றை பராமரிக்க
மற்றொருவருக்கு அதிகாரத்தை ,ஆலயத்தை சேர்ந்தவர்கள் தரும் ஆவணத்திற்கு அடுத்துக்குடுத்தல் என்று அழைப்பட்டது .

ஒரு ஆவணம் உடன்படிக்கை ஏற்பட்டு பின்பு ஆவணமாக பதிவு செய்யும் தருவாயில் , எழுதிக்கொடுக்கவேண்டியவர் இறந்துபோலாலோ ,அல்லது அயல் நாடு சென்றுவிட்டாலோபொறுப்பு ஏற்ட்டுக்கொண்ட வேறு ஒருவரால் அந்த ஆவணம் பதியப்படுவதுண்டு .இத்தகைய ஏற்பட்டிற்கு இத் தம் விசுதம் என்று அழைக்கப்பட்டிருக்கிறது

பண்டைய காலத்தில் ஆவணங்களை எழுதியவர்கள் பெரும்பாலும் ஊர் கணக்கர் ,ஊர் கரணத்தார் ,ஊர் நடுவர்கள் போன்றவர்களால் வழுத்தப்பட்டது .எழுதியவர்களின் பெயர் கையெப்பமும் கட்டாயம் ஆவணத்தில் இடம்பெற்றது
சிலவோலை
ஆவணங்களில் பயன் படுத்தப்பட்ட ஓலை வகைகள் அறயோலை ,இறையோலை ,ஓட்டோலை ,பொருள் மனவுறுதி ப் பொருட்ச்செலவோலை , ,
சிலாவோலை ,அடைவோலை ,ஆள்வோளை ,அறுதிப்பறிவர்தனை ஓலை ,
கையெழுத்து ஓலை என்றுபல வகை இருந்திருக்கின்றன .
மன்னர்கள் கொடையாக நிலங்களை ஊர்களுக்கு அளித்து ஓலையிலேஆணைகள் அனுப்பியபோது ,நாட்டார்கள் அந்த ஆணையில் தலையில் சூடி நிலத்தின் எல்லைகளை கட்டி அளந்து அளித்ததாக பல கல்வெட்டு செப்பேடுகள் கூறுகின்றன .இவை அறயோலை எனப்பட்டது .
இறையோலை என்பது வரிவிலக்கு அளிக்கும் ஆணைகளைத்தாங்கிய ஓலைகள் .
பல்லவர்கள் காடுத்திருத்தி விலை நிலங்களை உருவாக்கினார் , பின்பு தொடர்ந்த சோழர்கள் வ்விழாக்களைப்பெருக்கினர் வேளாண்மைக்கு , நீர்பாசனத்திற்கு
முக்கியத்துவம் அளித்தனர் .எனவே அவர்களின் ஆட்சியில் நிலப்பரிவர்த்தனைகள் மிகுதியாக நடைபெற்றன .
எனவே சோழர்கள் ஆட்சிக்காலத்திய ஆவணங்களும் நிறைய கிடைக்கின்றன
இப்போது நடைமுறையில் இருந்துவரும் ஆவணப்பதிவுகள் , அதைவிட மேம்பாட்டு சோழர்கள் காலத்திலேயே இருந்திருந்தது நம்,அக்கு கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது . அந்நியர்கள் நமக்குகற்றுத்தந்ததல்ல இந்தப் பத்திரப்பதிவு முறைகள் . .எப்படியெல்லாம் அறிவார்ந்த சமுதாயமாகஇருந்து பண்பட்டமுறையில் வாழ்ந்த நாம் எப்படி இப்படி ஆனோம் !

அண்ணாமலை சுகுமாரன்

படம் பண்டைய பிராமி கல்வெட்டு இணையத்தில் பெற்றது
ஆவணம் அல்ல .

Comment here