பிரத்யகம்

தமிழ்நாட்டில் பழங்கற்கால ஆயுதங்கள்

        “ஆற்றங்கரைகள் நாகரிகத்தின்  தொட்டில்கள்” என்பர் வரலாறு அறிந்தோர். பல்லாவரத்தைத் தொடர்ந்து Bruce Foote மற்றும் அவருடன் இணைந்து பணியாற்றிய William King இருவரும் கொசத்தலை ஆற்றுப் படுகையில் புவியியல் பணியைத் தொடர்ந்தனர். அத்திராம்பக்கம் பகுதியிலிருந்து வரும்  ஓடை கொசத்தலை ஆற்றுடன் கலக்கும் பகுதியில் பழங்கற்கால ஆயுதங்கள்  கிடைக்கப் பெற்றன. பல்லாவரத்தைப் போல இது ஒரு எதிர்பாராத கண்டுபிடிப்பு அல்ல. ஆய்வின் போது தேடிச் சென்று கண்டுபிடித்தப்  புதையல். 

இங்கே மிகுந்த அளவில் கிடைக்கும் பழங்கற்கால ஆயுதங்கள் பெரும்பாலும் குவார்ட்சைட் கற்களால் ஆனவை. பின்னாட்களில் “MADARS INDUSTRIES” எனப் பெயர் பெற்று விளங்கும் இப்பக்குதியில் , இவ்வளவு குவார்ட்சைட் கற்கள் எங்கிருந்து வந்தன. அதவும் ஆற்றுப் படுகையில் ? இங்கே குவார்ட்சைட் சிறிதும் பெரிதுமான கூழாங்கற்களாக கிடைக்கிறது. கோணல் மாணலாக இருக்கும் ஒரு கல் கூழாங்கல் வடிவம் பெற வேண்டடுமாயின் , அந்தக் கல் ஆற்று நீரில் நெடும் தூரம் அடித்து வரப்பட்டிருக்க வேண்டும். அல்லது கடல் அலைகளில் முன்னும் பின்னும் அலைக்கழிக்கப் பட்டிருக்க வேண்டும். அத்திரம்பாக்கம் ஓடை மிகச் சிறிய ஒன்று. கொசத்தலை ஆறும் அவ்வளவு பெரியதல்ல. பின் எப்படி?
அத்திரம்பாக்கம் ஓடை , குடியம் குகை அமைந்துள்ள அல்லிக்குழி மலைப் பகுதியிலிருந்து வருகிறது. இந்த மலை கூழாங்கற்கள் நிறைந்த கலவைக்கல் பாறைகளால் ஆனது. அந்த கூழாங்கற்கள்தான் அடித்து வரப்பட்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்த மனித இனம் ஆயுதங்கள் செய்ய பயன் பட்டிருக்கிறது. சரி, அல்லிக்குழி மலைக்கு கூழாங்கற்கள் எங்கிருந்து வந்தன . (தொடரும்).

Comment here