இல்லறம்

அட்சய திருதியை ,என்ன செய்தால் குடும்பம் லட்சுமி கடாச்சம் பெருகும்

Rate this post

அட்சய திருதியை அன்று எல்லோரும் என்ன செய்தால் குடும்பம் லட்சுமி கடாச்சம் பெற்று வாழ்வு மேன்மையடையும்.

1) உப்பு, மஞ்சள் மறக்காமல் வீட்டுக்கு வாங்கி வரவும்.

2) வெற்றிலை, பாக்கு வைத்து ஏதேனும் பொங்கல், பாயசம், வீட்டில் செய்து சாமிக்கு படைத்து குலதெய்வம் இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள்.

3) அன்னதானம், வஸ்திர தானம் அல்லது ஏதேனும் தானங்களை செய்தால் வாழ்வும் கொடுக்கும் திறன்கூடும் அதாவது கொடுக்கும் அளவு செல்வம் பெருகும்.

4) பறவைகள், விலங்குகள், பசுக்களுக்கு உணவளியுங்கள்.
இது உங்கள் குடும்பத்திற்கு பாவங்களையும் தோசங்களையும் குறைத்து வாழ்வு சிறப்பாக மாறும்.

5) இயலாதவர்களுக்கு உதவுங்கள். நல்ல நிம்மதியான குடும்ப வாழ்வும், அமைதியும் பெருகும்.

6) அரிசி, நவதானியங்கள் வாங்குங்கள்.

அரிசி தானியம் வாங்குவதால், நம் குடும்ப வறுமையின்றி நலமோடும் வளமுடன் வாழலாம்.
விவசாயத்தை வளமாக்கும். விவசாயிகள் நலமும் பெறுவர்.

நம் வீட்டிலும் வருடம் முழுவதும் சாப்பாட்டுக்கு பஞ்சம் வராது..

 

உப்பு, மஞ்சள், அரிசி, தானியம், தானங்கள் செய்வதே அக்ஷயதிருதியையில் நாமும் நமது குடும்பநலமும் சுற்றமும் விவசாயம் வணிகம் என அனைத்தும் செழிப்படையும்.

Comment here