World

அதிபர் புதின் போட்ட உத்தரவு – காதல் ஜோடியை கரம் பிடித்த ரஷிய ராணுவ வீரர்கள்…!

Rate this post

உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.

மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டிருக்கிறது.

இதனையடுத்து உக்ரைனுக்கு எதிரான போருக்கு தேவையான ராணுவ படைகளை திரட்ட ரஷிய அதிபர் புதின் உத்தரவிட்டார்.

இந்நிலையில் போருக்கு செல்வதற்கு முன்பாக ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 43 வீரர்களுக்கு மாஸ்கோ நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

ராணுவ உடையணிந்தபடி திருமணத்தில் கலந்து கொண்ட ரஷிய ராணுவ வீரர்கள், மகிழ்ச்சியுடன் தங்கள் காதல் ஜோடியை கரம் பிடித்தனர். இத்திருமண நிகழ்ச்சி மிக எளிமையான முறையில் நடைபெற்றது.

Comment here