World

அமெரிக்காவில் அதிர்ச்சி: 8 மாத குழந்தை உள்பட இந்திய சீக்கிய குடும்பமே கடத்தல்

Rate this post

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கொண்ட இந்திய சீக்கிய குடும்பமே கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மெர்செட் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27).இத்தம்பதிக்கு அரூஹி தேரி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. தேரிக்கு அமன்தீப் சிங் (39) என்ற மாமாவும் உள்ளார்.

கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ரன்தீர் சிங் வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜஸ்தீப் சிங் வசித்த வீட்டில் இருந்த கார் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சீக்கிய குடும்பத்தினர் 4 பேரும் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபரான ஜீசஸ் மேனுவேல் சால்கடோ என்பவர் போலீசார் வருவதற்குள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நிலையிலேயே அவர் உள்ளார். இதனால், 4 பேரின் கதி என்ன என்பது தெரிய வரவில்லை.

இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சி வெளிநாடுகளில் பரவி வர கூடிய சூழலில், இந்த கடத்தல் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comment here