World

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் கொலை… அதிர்ச்சி சம்பவம்

Rate this post

அமெரிக்காவில் 8 மாத குழந்தை உள்பட 4 பேர் கொண்ட இந்திய சீக்கிய குடும்பமே கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மெர்செட் கவுன்டி பகுதியில் வசித்து வந்தவர் ஜஸ்தீப் சிங் (36). இவரது மனைவி ஜஸ்லீன் கவுர் (27).இத்தம்பதிக்கு அரூஹி தேரி என்ற 8 மாத பெண் குழந்தை உள்ளது. தேரிக்கு அமன்தீப் சிங் (39) என்ற மாமாவும் உள்ளார்.

கடந்த செப்டம்பர் 29-ந்தேதி ரன்தீர் சிங் வெளிநாட்டிலிருந்து சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜஸ்தீப் சிங் வசித்த வீட்டில் இருந்த கார் ஒன்று தீ வைத்து கொளுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து, அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சீக்கிய குடும்பத்தினர் 4 பேரும் கடத்தப்பட்டது தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில் சந்தேக நபரான ஜீசஸ் மேனுவேல் சால்கடோ என்பவர் போலீசார் வருவதற்குள் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறும் நிலையிலேயே அவர் உள்ளார்.

இந்நிலையில், காணாமல் போன 4 பேரின் சடலமும் இண்டியானா சாலை மற்றும் ஹட்ச்ஹின்சன் சாலையை ஒட்டிய பழத்தோட்டத்தில் மீட்கப்பட்டிருக்கிறது.

தொழிலாளி ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.

Comment here